» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அளவுக்கு அதிகமாக மது குடித்த வாலிபர் சாவு : திருமணம் நின்று போனதால் சோகம்!
வெள்ளி 28, பிப்ரவரி 2025 7:59:00 PM (IST)
தூத்துக்குடியில் திருமணம் நின்று போனதால் அளவுக்கு அதிகமாக மது குடித்த வாலிபர் உயிரிழந்தார்.
உத்திரபிரேதச மாநிலம், ஜான்பூரைச் சேர்ந்தவர் பீம்சென் மகன் ஊடால் (31). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். தெற்கு வீரபாண்டியபுரத்தில் வீடு எடுத்து தங்கியிருந்தார். இவருக்கு கடந்த 9ம் தேதி ஊரில் வைத்து திருமண நிச்சயதார்த்த நடந்துள்ளது. பின்னர் அவர் வேலைக்கு வந்து விட்டார்.
இந்நிலையில கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பெண் வீட்டார் திருமணம் வேண்டாம் என்று கூறிவிட்டார்களாம். இதனால் மன வேதனையடைந்த அவர் கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்துள்ளார். இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










