» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் கலை விழா!
வெள்ளி 28, பிப்ரவரி 2025 7:45:46 PM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் நடைபெற்ற கலை விழாவில் ஆங்கிலத் துறை மாணவிகள் சுழற் கோப்பையினை வென்றனர்.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் கல்லூரி கலை விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி செயலர் ஷிபானா, முதல்வர் ஜெஸ்ஸி பர்னாண்டோ, துணை முதல்வர் எழிலரசி, சுயநிதி பிரிவு இயக்குனர் ஜோஸ்பின் ஜெயராணி, தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் ரீத்தா மற்றும் மாணவர் பேரவை குழு தலைவர் மேரி பாப்டிஸ்ட்டா ஜானட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி அரவிந்த் ஆட்டோ ஏஜென்சி நிர்வாக பங்குதாரர் சில்வியா ஜான் சிறப்பாக விருந்தினராக கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பரதம், பூ கட்டுதல், பூ அலங்காரம், காய்கறி செதுக்குதல், நகக்கலை, கொண்டை அலங்காரம், ரங்கோலி, தனி நடனம், குழு நடனம், தனிப்பாடல், குழு பாடல் போன்ற ஒருவர் இருவர் மற்றும் குழுவாக பங்கேற்க கூடிய 24 போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் அனைத்துத் துறை சார்ந்த மாணவிகளும் ஆர்வமாக பங்கேற்றனர்.
இரண்டாம் நாள் நிறைவு விழாவில் திருநெல்வேலி ஆல் இந்தியா ரேடியோவின் ஓய்வு பெற்ற மூத்த அறிவிப்பாளர் சந்திரா புஷ்பம் கலந்து கொண்டு கலையின் முக்கியத்துவத்தை தனது பாடல்கள் மூலம் எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவியர்களுக்கும் கேடயங்களும் சான்றிதழ்களும் பரிசாக வழங்கப்பட்டன.
இதில் ஒருவர் மற்றும் இருவர் பங்கேற்கும் போட்டிகளில் வணிகவியல் துறை சார்ந்த மாணவிகளும், குழுப்போட்டிகளில் ஆங்கிலத் துறை சார்ந்த மாணவிகளும் சுழற் கோப்பையினைத் தட்டிச் சென்றனர். இப்போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமையினை வெளிப்படுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










