» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா
வெள்ளி 28, பிப்ரவரி 2025 5:40:33 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது
ஓவ்வொராண்டும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, சர். சி.வி.இராமன் ‘இராமன் விளைவு’ கண்டுபிடித்த நாளான, 28, பிப்ரவரி ஆனது தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் இத்தினமானது அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளில் உலகளாவிய தலைமைத்துவத்திற்கு இந்திய இளைஞர்களை மேம்படுத்துதல் என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில், அறிவியல் பேரவையானது மாணவர்களுக்கு இடையே சுவரொட்டி தயாரித்தல், கட்டுரை எழுதுதல், அறிவியல் புதிர்களை தீர்ப்பது மற்றும் ருபிக்ஸ் கனசதுரத் தீர்வு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் நடந்த விழாவில் மாணவர் சங்க துணைத்தலைவர் ந. ஜெயக்குமார் வரவேற்றார். வே.ராணி முதல்வர் பொறுப்பு தலைமை உரையை வழங்கினார்.
ர. பிரித்திகா அறிவியல் தின உரை நிகழ்த்தினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. எம். ஜெசு மிராக்கிலின், மாணவர் சங்கத்தின் அறிவியல் கழகச் செயலாளர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்ததுடன் நன்றி உரையாற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










