» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி அரசுமகளிர் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வெள்ளி 28, பிப்ரவரி 2025 5:24:36 PM (IST)

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது.
இந்திய அறிவியல் அறிஞர் சர்.சி வி.இராமன் கண்டுபிடித்த ராமன் விளைவை உலகுக்கு அறிமுகப்படுத்திய தினமான பிப்.28ம் தேதியை தேசிய அறிவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பள்ளி மாணவிகள் பல்வேறு அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் பிரபாகரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா,மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் ஆகியோர்முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார்.
அறிவியல் கண்காட்சியை பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் முனுசாமி பார்வையிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் கோகிலா, அம்பிகா, சாந்தி, காந்திமதி, அகிலாராணி, கமலாராணி உள்பட ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை கெங்கம்மாள் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










