» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா சைக்கிள் போட்டி : மாபெரும் அறுசுவை மதிய விருந்து!
வெள்ளி 28, பிப்ரவரி 2025 5:13:07 PM (IST)

மெஞ்ஞானபுரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் மாநில அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாள் விழாவையொட்டி மெஞ்ஞானபுரம் பகுதி திமுக மற்றும் திருநெல்வேலி மாவட்ட சைக்கிளிங் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான சைக்கிள் போட்டி இன்று நடந்தது. மெஞ்ஞானபுரம் மெயின் பஜாரில் இருந்து தொடங்கிய இந்த போட்டியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் வி பி ராமநாதன் தொடங்கி வைத்தார். பொதுபிரிவு மற்றும் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முத்து செல்வன், மாவட்ட பிரதிநிதிகள் மதன்ராஜ், ஜெயபிரகாஷ், ராஜபிரபு, செட்டியாபத்து பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பாலமுருகன், குலசை பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் கணேசன், உடன்குடி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் அஸ்ஸாப் கல்லாச்சி, திமுக இளைஞரணி முத்துக்குமார், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செந்தில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ், வர்த்தக அணி துணை அமைப்பாளர் மாடசாமி, உடன்குடி முன்னாள் பேரூராட்சி செயலாளர் ஜான் பாஸ்கர்,இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் முத்துராமலிங்கம், உடன்குடி மேற்கு ஒன்றிய பொருளாளர் விஜயன், குலசை அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், நிர்வாகிகள் மைக்கா ரெத்தினராஜ், கிளை செயலாளர் ஜெரால்டு தன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியில் பொது பிரிவில் முதலிடத்தை திருநெல்வேலி சேர்ந்த ராஜன் ஸ்மித், 2ம் இடத்தை திருச்சி சேர்ந்த பிரதீப் சங்கரன் மற்றும் 3ம் இடத்தை திருச்சி சேர்ந்த தினேஷ் தட்டி சென்றனர். 16 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடத்தை மெய்ஞ்ஞானபுரம் சேர்ந்த ஜான்பால்,2ம் இடத்தை கரூரை சேர்ந்த சந்தோஷ்ம் மற்றும் 3ம் இடத்தை கரூரை சார்ந்த மாதேஷ்ம் தட்டி சென்றனர். பொது பிரிவில் முதல் பரிசாக ரூ. 15 ஆயிரத்து 73 , 2வது பரிசாக ரூ. 10,073, மூன்றாம் பரிசாக ரூ. 5073, 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதல் பரிசு ரூ.7,073, 2வது பரிசு ரூ.5,073, 3வது பரிசாக ரூ.3,073 தொகையை பொருளாளர் ராமநாதன் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை திமுக நிர்வாகிகள் ராஜாபிரபு, தினகர், சாம் டக்கர், ஜெயக்குமார், முத்துக்குமார், பிரவின் ஆகியோர் செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் வ.உ.சி திடல் அருகில் மாபெரும் அறுசுவை மதிய விருந்து நடைபெற்றது. இதனை மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ஏபி ரமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நகர்மன்ற தலைவர் சிவ ஆனந்தி, நகர திமுக செயலாளர் வாள் ஆர் சுடலை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரபின், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, துணை அமைப்பாளர் செந்தில் அதிபன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பொன் முருகேசன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைத் தலைவர் சந்திரசேகரன், நகர திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் கோட்டை எஸ் முத்து, திருச்செந்தூர் நகர் மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், ரேவதி, கிருஷ்ணவேணி, சோமசுந்தரி, அந்தோணி ரூபன், சுதாகர், ஆனந்த ராமச்சந்திரன், தினேஷ் கிருஷ்ணா, அனிதாவின் முரட்டு பக்தன் சோடா ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










