» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எதிர்பார்க்காத கூட்டணி விரைவில் வரப்போகிறது: தூத்துக்குடியில் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு!
வெள்ளி 28, பிப்ரவரி 2025 3:49:20 PM (IST)

"நீங்கள் எதிர்பார்க்காத கூட்டணி விரைவில் வரப்போகிறது. அதற்குரிய யூகத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார் என தூத்துக்குடியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் எம்ஜிஆர் திடலில் வைத்து தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், "புரட்சித்தலைவி அம்மாவின் காலத்தில் தான் தமிழகத்தில் பல விதமான நல்ல பல திட்டங்களை மக்களுக்கு பயன்பாட்டிற்கு தந்தார்கள். உதாரணத்திற்கு மகளிர் சுய உதவிக் குழுவை ஆரம்பித்தது அம்மாவின் ஆட்சிக்காலத்தில் தொட்டில் குழந்தை திட்டம் இலவச மிக்சி கிரைண்டர் இப்படி அம்மாவின் திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் திமுக பொருத்தவரை மக்கள் மனதில் நிற்கும் அளவு எந்த ஒரு நல்ல திட்டத்தையும் அவர்கள் செய்யவில்லை. அம்மாவின் வழியில் கடந்த நான்கரை ஆண்டு காலம் எடப்பாடியார் தமிழகத்தில் நல்லாட்சி செய்தார் எடப்பாடியார் கொண்டு வந்த அம்மா மினி கிளினிக், அம்மா மருந்தகம் விவசாயிகளுக்காக குடிபராமத்து திட்டம், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் வகையில் 7.5சதவீத இட ஒதுக்கீடு இப்படி நல்ல திட்டங்கள் கணக்கில் அடங்காதவை. இன்று திமுக ஆட்சிக்கு வந்து நான்காண்டு காலம் ஆகிறது,
எடப்பாடி யார் நான்கரை ஆண்டு காலம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார் இதில் யார் ஆட்சி ஆட்சி சிறந்த ஆட்சி என்பதை இன்று மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். மக்களுக்கு நன்மை செய்கின்ற இயக்கம் என்றால் அது அதிமுக மட்டும் தான். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் விற்பனை, பாலியல் தொல்லைகள் அதிகரித்துள்ளது இந்த நிலைமை மாற வேண்டும் எனில் மீண்டும் தமிழகத்தில் அமைப்பு எனில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி அமைந்தால் மட்டும் தான் முடியும் என்றார்,
அதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக பொருளாளரும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் வாரிசு அடிப்படையில் இந்த ஆட்சி நடைபெறுகிறது. கனிமொழி எம்பி நாடாளுமன்றத்தின் இரண்டு சபைக்கும் தலைவராக இருக்கிறார். அவரது அப்பாவுக்கு இணையான டி.ஆர். பாலு அவர்களை புறம் தள்ளிவிட்டு வாரிசு என்கிற அடிப்படையில் டெல்லியில் அத்தனைக்கும் தலைவர் நான் என்று நடக்கிறார். மேலும்,பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் தமிழகத்தில் 12 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது என்பதை கனிமொழி உணர்ந்து இருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை.
இந்த ஆட்சியில் தினசரி கெலைகள், கொள்ளைகள், கற்பழிப்பு நடப்பது நடப்பது போல, தங்கம் விலை எங்கு போய் நிற்கப் போகிறது என்று தெரியவில்லை. வேண்டுமானால் நம் பிள்ளைகளுக்கு பெயர் வைத்துக் கொள்ளலாம் தங்கத்தாய், தங்கப்பன், தங்கராசு,பவுன் தாய், பவுன் அம்மா என்று பெயர் வைத்து கூப்பிட்டு கொள்ளலாமே தவிர ஒரு பொட்டு தங்க நகை வாங்க முடியாது.
எங்கு பார்த்தாலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையாகிறது.ஸ்கூல் அருகில் கூலிப் விற்பனை செய்யப்படுகிறது. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பல்லுக்கு இடையே அதை இடுக்கி கொண்டு அனைத்து தவறுகளும் செய்கின்றனர். படிக்கும் சகோதரிகளை, குழந்தைகளை 5 பேர், 10 பேர் சேர்ந்து கேவலப்படுத்துகின்றனர்.
மத்திய அரசின் நிதிக்காக மும்மொழி கொள்ளையை ஏற்றுக்கொண்டு ஆதரித்து கடிதம் கொடுத்துவிட்டு மக்கள் எதிர்க்கிறார்கள் என்றவுடன் இன்று எதிர்ப்பது போல் ஒரு நாடகத்தை நடத்துகின்றனர்.தற்போது எல்லாரும் பேசுகிறார்கள், எங்கே போனாலும் மக்கள் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்று சொல்கிறார்கள் கூட்டணி என்ன செய்யப் போகிறார்கள் என்று கேட்கிறார்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் தோழர்களே நீங்கள் எதிர்பார்க்காத கூட்டணி விரைவில் வரப்போகிறது அதற்குரிய யூகத்தை மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவிப்பார்.
நாம் யாரையும் போய் கேட்கவில்லை சூழ்நிலை தெய்வத்தின் அருளால் அப்படியே வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் விரைவில் வெளியே வருவார்கள் ஒன்னும் பிரச்சனையே இல்ல கூட்டணி பலம் ஆசிரியர் பெருமக்கள் அரசு அதிகாரிகள் ஜாக்டோ ஜியோ தோழர்கள் மற்றும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட சகோதரிகள் குடும்பங்கள் அத்தனையும் எதிர்க்கின்ற பொழுது அத்தனை சீட்டுகளையும் திமுக டெபாசிட் இழந்து அனைத்திலும் 200 தொகுதிக்கு மேல் அண்ணா திமுக வெற்றி பெற்றது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக நமது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அம்மாவின் ஆட்சி வந்திருக்கிறது வரப்போகிறது என்ற செய்தி வரும் சட்ட ஒழுங்கை காப்பாற்றி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வண்ணம் நல்லாட்சி தருவோம் நம்பிக்கையாக இருங்கள் என்றார். தையல் மிஷின், அயன் பாக்ஸ், சைக்கிள்,வேஷ்டி ,சேலை என நலத்திட்ட உதவிகளை 1000 பேருக்கு வழங்கினர். இதில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)











அமுல்Mar 1, 2025 - 01:30:00 AM | Posted IP 172.7*****