» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தொழிலாளர்கள் போராட்டம்: மின்உற்பத்தி பாதிக்கும் அபாயம்

வெள்ளி 28, பிப்ரவரி 2025 3:37:40 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மின்உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் தூத்துக்குடி, மேட்டூர், வட சென்னை உள்ளிட்ட அனல் மின் நிலையங்கள் மற்றும் மின்சார விநியோக பிரிவில் ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் 10 ஆண்டுகள் ஆன ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்திருந்தனர். 

ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் தூத்துக்குடி அனல்மின் நிலையம் முன்பு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் 300க்கும் மேற்பட்ட மேற்பட்ட ஆண், பெண் ஒப்பந்த ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிபடி ஒப்பந்த ஊழியர்களை பணி நேரம் செய்ய பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக 30 ஆயிரம் வழங்க வேண்டும். மார்ச் மாதம் ஐந்தாம் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வார விடுமுறை உடன் கூடிய ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். ரசீது வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். தொழிலாளர்களின் தொடர் காத்திருப்பு போராட்டத்தால் மின்உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory