» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரூ.60 லட்சத்திற்கு வாங்கிய புது லாரி விபத்து: சரி செய்து கொடுக்காத நிறுவனம் - உரிமையாளர் வேதனை
வெள்ளி 28, பிப்ரவரி 2025 3:32:12 PM (IST)
தூத்துக்குடியில் ரூ.60 லட்சத்திற்கு வாங்கிய புது லாரி விபத்து நடந்து 75 நாட்கள் ஆகியும் சம்பந்தப்பட்ட டாட்டா நிறுவனம் சரி செய்து கொடுக்காததால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி சுப்பையா முதலியார் புரத்தைச் சார்ந்த கஸ்பார் மகன் பாரத், இவர் மாப்பிள்ளை பூரணி விலக்கில் உள்ள டாட்டா மோட்டர் கம்பெனியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி லாரி ஒன்றை 60 லட்சம் ரூபாய்க்கு பைனான்ஸ் உதவியுடன் வாங்கியுள்ளார்.
லாரி வாங்கப்பட்டு 15 நாட்களில் 2800 கிலோமீட்டர் ஓடிய நிலையில் தூத்துக்குடி அருகே ஜனவரி ஒன்றாம் தேதி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து டாட்டா கம்பெனி நிறுவனத்தின் மூலம் ஓரியண்டல் இன்சூரன்ஸில் பாரத் விண்ணப்பித்து அதில் வண்டிக்கு விபத்து காப்பீட்டு தொகையாக டாட்டா மோட்டார் நிறுவனத்திற்கு ரூ.20 லட்சம் தருவதாக ஒத்துக் கொண்டது.
ஆனால் விபத்து நடைபெற்று 75 நாட்களை கடந்த பின்பும், லாரியின் உதிரி பாகங்கள் வரவில்லை எனக் கூறி டாட்டா நிறுவனம் வண்டியை அதன் உரிமையாளர்களுக்கு சரி செய்து கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வங்கியில் இந்த வண்டிக்காக வாங்கப்பட்ட லோன் மாதத் தவணை ரூபாய் 1 லட்சத்து 5 ஆயிரம் தொடர்ந்து வண்டி விபத்துக்குள்ளான பிறகும் இதுவரை 4 மாத தவணைகள் முறையாக பாரத் கட்டி வந்துள்ளார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த அவர், இன்று டாட்டா நிறுவனத்திடம் முறையிட்டபோது அவர்கள் அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "இன்சூரன்ஸ் கிளைம் எல்லா பொருள்களுக்கும் அப்ரூவல் கொடுக்கப்பட்ட நிலையில் டாட்டா நிறுவனமும் அதை டீலர் எடுத்துள்ள ஏபிடி கம்பெனியில் பணம் இல்லாததாலும் டாட்டா நிறுவனத்திடம் உதிரி பாகங்களும் இல்லாததாலும் தனது லாரி சரி செய்து கொடுக்கப்படவில்லை என்றார்.
ரூபாய் 60 லட்சத்திற்கு வாங்கப்பட்ட இந்த லாரியானது பிரித்துப் போடப்பட்டு வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறது இதை அடுத்து உபயோகப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. இதனால் தனக்கு ரூபாய் 30 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட முடியாமல் வெளியில் வட்டிக்கு வாங்கி மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவித்தார்.
இதனால் என்னுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்ற அவர் இதுவரை டாடா நிறுவனம் தனக்கு முறையான பதில் எதுவும் அளிக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்து இதுகுறித்து நீதிமன்றத்திலும் முறையீடு புகார் செய்துள்ளேன் என்றார்.டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்திலிருந்து இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார். இதை நம்பி எடுத்த காண்ட்ராக்ட் தற்போது தனது கையை விட்டு சென்று விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










