» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்து: லாரி டிரைவர் பலி!
வெள்ளி 28, பிப்ரவரி 2025 8:44:32 AM (IST)
கயத்தாறு அருகே, சாலையோர பள்ளத்தில் மோட்டார் பைக் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள பன்னீர்குளம் தெற்கு தெருவை சேர்ந்த கருப்பையா மகன் பாலகிருஷ்ணன் (47). லாரி டிரைவர். இவர் சொந்த லாரி வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவராத்திரியை முன்னிட்டு அரசன்குளத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள உறவினர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை இரவல் வாங்கி கொண்டு, கயத்தாறு சுற்றுவட்டாரத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
நள்ளிரவில் அகிலாண்டபுரத்தில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த அவர், உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் பன்னீர்குளத்தில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். கடம்பூர் சாலையில் அகிலாண்டபுரம் விலக்கு அருகே உள்ள வளைவில் திரும்பியபோது, திடீரென மோட்டார் சைக்கிள் அவரதுகட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்துள்ளது.
இதில் அந்த பள்ளத்தில் குவிந்து கிடந்த கற்களில் தலைமோதியதில் பலத்த காயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்து போனார். நேற்று காலையில் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை தேடியுள்ளனர்.
இதற்கிடையில், அவர் அகிலாண்டபுரம் விலக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் பிணமாக கிடந்த தகவல் அறிந்த கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல் மற்றும் போலீசார் சென்று, அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன பாலகிருஷ்ணனுக்கு காந்தி என்ற மனைவியும், சிவா என்ற மகனும், செல்வி என்ற மகளும் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










