» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆளுநர் ஆர்.என். ரவி சுவாமி தரிசனம்

வியாழன் 27, பிப்ரவரி 2025 10:07:06 PM (IST)



திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று 4. 00 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த கவர்னர், அங்கிருந்து காரில் திருச்செந்தூர் சென்று அய்யா வைகுண்டர் அவதார பதியில் சுவாமி தரிசனம் செய்தார். 

அவரை அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர், துணை தலைவர் அய்யா பழம், பொருளாளர் கோபால், செயலாளர் பொன்னுதுரை ,துணைச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். முன்னதாக கடற்கரைக்கு சென்று கவர்னர் ஆர். என். ரவி தீர்த்த வாரி செய்து பின்னர் பதியில் சுமார் ஒரு மணி நேரம் சுற்றி பார்த்து நிர்வாகிகளுடன் உரையாடினார். அவருக்கு பதி சார்பில் குத்துவிளக்கு மற்றும் அய்யனார் வைகுண்டரின் உருவப்படம் வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காரில் நெல்லைக்கு சென்றடைந்தார்.


மக்கள் கருத்து

ஆம்Mar 1, 2025 - 12:07:21 PM | Posted IP 104.2*****

ஆளுநரை நம்பலாம் ஆனால் ஹிந்தியை நம்பக்கூடாது

AYYAFeb 28, 2025 - 11:37:00 AM | Posted IP 172.7*****

VALTHUKKAL

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory