» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேய்க்குளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி பலி

வியாழன் 27, பிப்ரவரி 2025 10:05:55 PM (IST)

பேய்க்குளம் அருகே குளத்தில் மூழ்கி 17 வயது சிறுமி பரிதாபமாக  உயிரிழந்தாள். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம் பேய்க்குளம் அருகே உள்ள வசவப்பனேரி ஊரைச் சேர்ந்த லிங்கதுரை (42) என்பவருக்கு 4 மகன் 1 மகள் உள்ளனர். அவரது மகள் பொன்னாத்தாள் (17) என்பவர் இன்று மதியம் சுமார் 1 மணியளவில் வீட்டில் வளர்க்கும் மாட்டினை வசவப்பநேரி பெரிய குளத்தில் குளிப்பாட்ட சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக குளத்து நீரில் மூழ்கி விட்டார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் வாகனம் மூலம் ஶ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பொன்னாத்தாள் இறந்துவிட்டார். இறந்து போன நபரின் உடல் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory