» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் போதை மீட்பு சிகிச்சை மையம்: முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

வியாழன் 27, பிப்ரவரி 2025 4:22:09 PM (IST)



தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள போதை மீட்பு சிகிச்சை மையத்தினை காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அமைச்சர் பி.கீதா ஜீவன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (27.02.2025), மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலங்கரை ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை (ம) மறுவாழ்வு மையத்தினை காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தினை குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது: போதை இல்லா தமிழ்நாடு" என்ற நோக்கத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 20 கோடி பொருட்செலவில் 25 "கலங்கரை" என்ற ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை, தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காணொளி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்கள்.

நமது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கை வசதி கொண்ட ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதை மீட்பு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் மனோ தத்துவ நிபுணர்கள் மூலம் கவுன்சிலிங் செய்யப்படுகிறது.

முதல் வார தீவிர சிகிச்சைக்கு மட்டும் உறவினர்கள் உடன் இருக்க வேண்டும். அதன் பின்னர் 3 முதல் 4 வாரங்கள் மறுவாழ்வு சிகிச்சையின் போது உறவினர்கள் தேவையில்லை. இச்சிகிச்சை மையத்தில் ஒருங்கினைந்த முறையில் மாத்திரைகள், மருந்துகள் மட்டுமின்றி உளவியல் ஆலோசனை, மனமகிழ் விளையாட்டுக்கள் மற்றும் செயல்கள் (கேரம்போர்டு, செஸ் போர்டு, புத்தகங்கள் தொலைக்காட்சி), யோகா மற்றும் குடும்ப நல ஆலோசனை இணைந்து வழங்கப்படுகிறது.

மருத்துவமனையிலிருந்து நோயாளி விடுவிக்கப்பட்ட பின்னர் மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் மேலும் கூடுதல் விபரங்கள் அறிய கட்டணம் இல்லா தொலைபேசி 14416 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான், அரசு மருத்தவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணை முதல்வர் கலைவாணி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, உதவி பேராசிரியர் பொறுப்பு மருத்துல அலுவலது கலங்கரை ஒருங்கிணைந்த போதை மறுவாழ்வு மையம் மனநல சிகிச்சை துறை ஸ்ரீராம் மற்றும் பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory