» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 18.97%ஆக குறைந்துவிடும் : தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

வியாழன் 27, பிப்ரவரி 2025 3:09:04 PM (IST)



மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையரை செய்தால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 18.97 சதவீதமாக குறைந்துவிடும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்

தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி "மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு செய்யும்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும். தமிழ்நாடு வளர்ச்சிக்கு பாதிக்க கூடியதாக இருக்கும். முதல்வர் முதலில் இதை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார். தென் மாநிலங்களில் இருந்து இதற்கு ஆதரவந்துள்ளது.

பிற தலைவர்கள் எல்லாம் நமது முதல்வர் குரலுக்கு ஆதரவாக பேசி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை மிகத் தீவிரமாக செயல்படுத்தி நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற அளவிலே அரசு தீவிரமாக செயல்படுத்தி அதன் மூலம் வளர்ச்சிப் பணிகளை தீட்டியது. தென் மாநிலத்திலேயே பிறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாகவே உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் நமக்கு தொகுதி குறையும் பாதிப்பு உள்ளது 

தென் மாநிலம் எல்லாமே பாதிக்கும். மத்திய அரசின் ஒவ்வொரு முயற்சியும் நம்மை ஒடுக்கக்கூடிய அளவிலே உள்ளது. பட்ஜெட்டாக இருந்தாலும் சரி, நிதி ஒதுக்கிடாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, புதிய கல்வித்துறை பின்பற்ற வேண்டும் என்று நிரூபிப்பதாக இருந்தாலும் சரி ஒடுக்கும் வகையிலேயே உள்ளது. தொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போதும், மகளிர் இட ஒதுக்கீடு விவாதத்தின் போதும் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைக்கப்பட்ட பின்னர் இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று உள்துறை அமைச்சர் பேசியுள்ளார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் பேசியுள்ளார். தென் மாநிலங்களில் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று நமது முதல்வர் குரல் கொடுக்கிறார் 

மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையரை செய்தால் நமது பிரதிநிதித்துவம் 18.97 சதவீதமாக குறையும். தெலுங்கானா பிரச்சாரத்தின் போது கூட பிரதமர் மக்கள் தொகை அடிப்படையில் செய்தால் தென்னிந்தியாவில் 100 தொகுதிகள் குறையும் என்று பேசினார். தமிழகத்தின் நலன், எதிர்கால சந்ததியின் நலன் கருதி அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்து விடக்கூடாது. உள்துறை அமைச்சர் இது குறித்து தெளிவாக பேசவில்லை தெளிவுபடுத்த வேண்டும் 

நாம் குரல் அற்றவர்களாக ஆகிவிடக்கூடாது. மணிப்பூரில் கலவரம் தலைவிரித்து ஆடியது இதை யாரும் கேட்கவில்லை. நமது உரிமையை நாம் காப்பாற்ற வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு தர வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்றார். 

பேட்டியின் போது மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், ஓட்டப்பிடாரம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் காசி விஸ்வநாதன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார் ரவிக்குமார் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் அமைச்சரின் நேர்முக உதவியாளர் ஆல்பர்ட் ஆகியோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory