» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது!
வியாழன் 27, பிப்ரவரி 2025 11:18:27 AM (IST)
விளாத்திகுளம் அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வீரகாஞ்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் ரஞ்சித்குமார்(55). இவர் நரிப்பையூரில் உள்ள இரும்பு பட்டறையில் வேலை செய்து வந்துள்ளார். இவருடைய 12 வயது மகள் வேம்பார் பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், பள்ளி விடுமுறை தினத்தன்று இவரது மனைவி கூலி வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த தனது 12 வயதுடைய மகளுக்கு ரஞ்சித் குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமி, தந்தை தன்னிடம் தவறாக நடந்தது பற்றி நடந்தவற்றையெல்லாம் தனது தாயிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் உடனடியாக சைல்டு லைனில் புகார் அளத்துள்ளார். இதையடுத்து சைல்டு லைன் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயுடன் வந்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் வந்து புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










