» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பரோட்டா மாஸ்டருக்கு அரிவாள் வெட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வியாழன் 27, பிப்ரவரி 2025 11:15:14 AM (IST)
தூத்துக்குடியில் பரோட்டா மாஸ்டரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய 10பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர், மேட்டுப்பட்டி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அன்வர் மகன் முகமது (26) இவர் தாளமுத்து நகரில் உள்ள ஓட்டல் கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்த பின்னர், தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மது அருந்தினாராம்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று இரவு 10 பேர் கொண்ட கும்பல் முகமது வீட்டுக்கு சென்று அவரை வெளியே அழைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினார்களாம். இதில் கை, கால் உள்பட 14 இடங்களில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










