» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜே.சி.ஐ., பெம் ஸ்டார்ஸ் சார்பில் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பாராட்டு விழா!
வியாழன் 27, பிப்ரவரி 2025 10:07:05 AM (IST)

துாத்துக்குடியில் ஜே.சி.ஐ., பெம் ஸ்டார்ஸ் அமைப்பின் சார்பில் பெண் ஆட்டோ ஓட்டுநர்களை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
துாத்துக்குடி ஜே.சி.ஐ., பெம் ஸ்டார்ஸ் சார்பில் அமைப்பின் ஒவ்வொரு ஆண்டும் சுயதொழில் செய்து முன்னேறும் பெண்களை, கவுரவப்படுத்தி, பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. துாத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்த மாரிச்செல்வி, சோட்டையன் தோப்பை சேர்ந்த ரூபா தேவி ஆகிய 2 பெண்கள், கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி தன் குடும்பத்தை நடத்தி வருகிறார்கள்.
அவர்களுக்கு ஜே.சி.ஐ., பெம் ஸ்டார்ஸ் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில், மண்டல துணை தலைவர் டாக்டர் வெண்மணி கலந்து கொண்டு, சால்வை அணிவித்து, பரிசுகள் வழங்கி "பெண்களின் சுய முன்னேற்றத்தை பாராட்டி, முன் மாதிரியாக விளங்கும் பெண்களை முன் நிறுத்துதல் மூலம், மற்ற பெண்களுக்கு ஒரு நல்ல வழி காட்ட முடியும்" என்று பாராட்டி பேசினார்.
விழாவில், ஜே.சி.ஐ., பெம் ஸ்டார்ஸ் தலைவர் பிரைனா பிரபாகரன், முன்னாள் தலைவர் குணசுந்தரி, துணை தலைவர்கள் நிஷா குருசேகர், பத்மா, இனிகோ கார்டோஷா, கிருபா, சாந்தி,சத்திய பிரியா,விமலா, பிருந்தா, ஏஞ்சல் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டு பெண் ஆட்டோ டிரைவர்களை ஊக்கப்படுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










