» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரிவாளால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்றி போலீஸ் விசாரணை!

வியாழன் 27, பிப்ரவரி 2025 8:21:55 AM (IST)

தூத்துக்குடி அருகே அரிவாளால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூா் ராஜாகோயிலைச் சோ்ந்த ஞானதுரை மகன் பிரவீன் செல்வகுமாா் (26). இவா் கடந்த 18ஆம் தேதி காயலூரணியில் உள்ள கோயில் அருகே சென்றபோது, சிலா் அரிவாளால் வெட்டி, கம்பால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த பிரவீன் செல்வகுமாரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் புதியம்புத்தூா் காவல் உதவி ஆய்வாளா் ஜெஸ்லின் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தாா். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரவீன் செல்வக்குமாா் நேற்றுஉயிரிழந்தாா். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விசாரணையில் புதியம்புத்தூர் ராஜாகோயிலைச் சேர்ந்த சௌந்திரபாண்டி மகன் இம்மானுவேல் விஜயசீலன் (25) உள்ளிட்ட சிலர் முன்விரோதம் காரணமாக அவரை வெட்டியது தெரியவந்தது. இது தொடர்பாக புதியம்புத்தூர் போலீசார் கொலை வழக்குப் பதிந்து, அதே ஊரைச் சேர்ந்த இம்மானுவேல் விஜயசீலன், ஆர்த்தி (26), செல்வதங்கம் (24), சின்னராஜ் (35) ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.


மக்கள் கருத்து

inbaFeb 28, 2025 - 08:07:29 AM | Posted IP 162.1*****

rip

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory