» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவிலில் சிவராத்திரி விழா கோலாகலம் : திரளான பக்தர்கள் தரிசனம்
வியாழன் 27, பிப்ரவரி 2025 8:08:46 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீசங்கரா ராமேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுவாமிக்கு நேற்று மாலை சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அலங்கார தீபாரானை நடைபெற்றது.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் சிறுவர்களுக்கான இந்து சமய சான்றோர்கள் மாறுவேடப்போட்டி, தேவாரப்பாடல் இசைப்போட்டி, பரதநாட்டிய போட்டிகள் நடந்தன. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஓம் நமச்சிவாயம் எழுதினர் இவர்களுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் பேனா, பால் பிஸ்கட் வழங்கப்பட்டது. மாலை 5.00 மணிக்கு பாம்பே புகழ் கணேசன் மற்றும் குழுவினர் "மங்கள இசை", 5.30 மணிக்கு தேவார இசை மணி ச.சுப்பிரமணியன், தேவார ஆசிரியர் & மாணவர்கள் வழங்கும் "திருமுறை இன்னிசை", 6.00 மணி "216 சிவலிங்க பூஜை”, திருவிளக்கு பூஜை, இரவு 7.30 மணி குழந்தைகளுக்கான "மாறுவேடப் போட்டி"நடந்தது
8.30 மணிக்கு 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான "தேவாரப் போட்டி” நடந்தது. இரவு 9.30 மணிக்கு "திருமந்திரநகர் சிவன் கோவில் தல வரலாறு புத்தகம் மறுவெளியீடு விழா நடந்தது இதில். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளை மேலாளர் கண்ணன் வெளியிட சிவன் கோவில் பிரதான பட்டர் செல்வம் பெற்றுக்கொண்டார் மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இரவு 10.00 மணிக்கு 50 மேற்ப்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்ற "பரதநாட்டிய நிகழ்ச்சி, இரவு 12.00 மணிக்கு சித்தாந்த சுடர்மணி, சிவஞானசாகரம் வழங்கிய 'சிறப்பு சொற்பொழிவு", இரவு 01.00 மணிக்கு பாஸ்கர் மதிவதினி குழுவினரின் சிவநாம சங்கீர்த்தனம்" இரவு 02.00 மணிக்கு விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பேராசிரியர்.கோ.பழநி & குழுவினரின் "ஆன்மீக பட்டிமன்றம்" நடந்தது
அமைச்சர் கீதா ஜீவன் சுவாமி தரிசனம்

தூத்துக்குடி சிவன் கோவிலில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவரை கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, அறங்காவல குழு தலைவர் கந்தசாமி, அறங்காவலர்கள் பிஎஸ்கே ஆறுமுகம், சாந்தி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சிவன் கோவில் பிரதான பட்ட செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு விழாவில் நான்கு கால பூஜைகள் சாமி அம்பாளுக்கு சிறப்பாக நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சிவன் கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, அறங்காவலர்கள் பிஎஸ்கே ஆறுமுகம் சாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










