» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு: பெண் உட்பட 2பேர் கைது!
வியாழன் 27, பிப்ரவரி 2025 7:53:48 AM (IST)
ஓட்டப்பிடாரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை மற்றும் பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கக்கரம்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி உலகம்மாள் (55). இவா் கடந்த 18ஆம் தேதி விவசாய வேலைக்கு சென்றபோது, மா்ம நபா் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 7 பவுன் தங்க நகை, ரூ. 24 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்றாராம்.
ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப் பதிந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனா். அவரது எதிா்வீட்டைச் சோ்ந்த ஆறுமுகசாமி மனைவி சசிகலா (33) என்பவா் இத்திருட்டில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து நகை, பணத்தைப் பறிமுதல் செய்தனா்.
மற்றொரு சம்பவம்
தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதிநகரைச் சோ்ந்த பொன்பாண்டி மனைவி காந்திமதி (58), மடத்தூரில் உள்ள தனியாா் மீன் நிறுவனத்தில் வேலைபாா்த்து வருகிறாா். இவா் கடந்த 23ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் செபத்தையாபுரத்தில் உள்ள உறவினா் சென்றாா். அடுத்த நாள் வந்துபாா்த்தபோது, மா்ம நபா்கள் பூட்டை உடைத்து, வீட்டிலிருந்த ரூ. 8 ஆயிரத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
புகாரின்பேரில், முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, சிடிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதே பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் காளிராஜ் (23) என்பவரைக் கைது செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










