» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஜாண்சன் பள்ளியில் மினி ஒலிம்பிக்ஸ் விளையாட்டு விழா
சனி 22, பிப்ரவரி 2025 8:16:21 PM (IST)

தூத்துக்குடியில் உள்ள ஜாண்சன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் "JES மினி ஒலிம்பிக்ஸ்” என்னும் விளையாட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஓட்டப் பந்தயம், தொடர் ஓட்டப் பந்தயம், தடையேற்றப் போட்டிகள், கேரம், சதுரங்கம், பூப்பந்து, டென்னிகாய்ட் மற்றும் கோ கோ போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நிகழ்வை மிகவும் சுவாரஸ்யமாக்க, பள்ளி நிர்வாகம் மாணவர்களை சேர, சோழ, பாண்டிய என மூன்று தமிழ் வம்சங்களாகத் தொகுத்தது. இறுதியில், பாண்டிய வம்சம் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இந்நிகழ்ச்சியில் சர்வதேச எறிபந்து வீரர், இந்திய அணி பயிற்சியாளர் மற்றும் தங்கப் பதக்கம் வென்ற இ. இசக்கித்துரை, கலந்து கொண்டு பேசுகையில், "ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அருகாண உணவுகளை வழங்காமல், அவர்களின் உடல்தகுதி மற்றும் வலிமையை உறுதி செய்ய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், ஒழுங்குமுறையான பயிற்சியின் முக்கியத்துவத்தை பற்றியும், ஒரு அல்லது இரண்டு நாட்கள் மட்டும் பயிற்சி செய்வது போதுமானதல்ல; உண்மையான வெற்றி கடின உழைப்பிலும், முழுமையான அர்ப்பணிப்பிலும், தொடர்ந்து செய்யும் பயிற்சியிலும் தான் இருக்கிறது" என்று தெரிவித்தார். தாளாளர் செல்வராஜ் மற்றும் நிறுவனர்/முதல்வர் பாத்திமா செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் அபாரமான செயல்களை பாராட்டி வாழ்த்தினர். நிகழ்ச்சியை தலைமையாசிரியை ஜூவானா கோல்டி, மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)










