» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காங்கிரஸ் இல்லாமல் கூட்டணிக் கட்சிகள் ஜெயிக்க முடியாது : ராமசுப்பு பேச்சு
சனி 22, பிப்ரவரி 2025 4:25:26 PM (IST)

காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் கூட்டணிக் கட்சிகள் ஜெயிக்க முடியாது என கோவில்பட்டியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு பேசினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட்டார, நகர, கிராம காங்கிரஸ் கமிட்டி வார்டு மறு சீரமைப்பு பணிகளுக்கான ஆய்வு கூட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. தூத்துக்குடி பாராளுமன்ற பொறுப்பாளர் வழக்கறிஞர்மகேந்திரன் தலைமை வகித்தார் மாவட்ட பார்வையாளர் காமராஜ், பொன் சக்தி மோகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு கலந்து கொண்டு மறு சீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசுகையில் "காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் கட்சியை தூக்கிப் பிடிக்க முடியும். எல்லா இடத்திலும் காங்கிரசுக்கு என்று வாக்கு வங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி இல்லாமல் கூட்டணிக் கட்சிகள் ஜெயிக்க முடியாது. இதை எல்லோரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும், காங்கிரசுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர்.
உங்கள் கட்சியில் செயல்வீரர்கள் உள்ளார்களா என்று மக்கள் கேட்கின்றனர். ஆகையால் அது நாம் உருவாக்க வேண்டும். கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் உருவாக்க முடியும், நாலு பேர் நம்மைப் பார்த்து என்னைக்கு வந்தீர்கள் என்று கேட்பார்கள், கேட்கத்தான் செய்வார்கள். ஏனெனில் நாம் கூட்டணியோடு ஓடிக் கொண்டிருப்பதால் நம்மை கேட்கின்றனர். தனியாக நின்று வெற்றி பெற்றிருந்தால் கேள்வி கேட்க மாட்டார்கள். காங்கிரஸ் வலுவான கட்சியாகத்தான் இருக்கிறது. கட்சியின் அடிப்படைகளை சரி செய்ய வேண்டும் நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்றார்.
இதில் கோவில்பட்டி சட்டமன்ற பொறுப்பாளர்கள் காமராஜ், பொன்னுசாமி பாண்டியன், அருண்பாண்டியன், விளாத்திகுளம் சட்டமன்ற பொறுப்பாளர் பிரேம்குமார், பெத்துராஜ், ஆறுமுகசாமி, ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் மாரிமுத்து, வீரபாகு, மாவட்ட பொது செயலாளர்கள் ஐஎன்டியூசி ராஜசேகரன், சண்முகராஜா, மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி, ஊடக பிரிவு தலைவர் ராஜசேகரன், மாவட்ட செயலாளர் துரைராஜ், வட்டார தலைவர் செல்லதுரை, உள்பட கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)










