» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிப்பு: சமூக ஆர்வலர் கண்டனம்

சனி 22, பிப்ரவரி 2025 3:17:33 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை செய்ய வேண்டும் என தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தாெடர்பாக தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக மாவட்ட செயலாளர் செல்வகுமார் வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி மாநகராட்சியின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 4 வது பைப்லைன் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு கருப்புநிறக்குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. ஆனால் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டு குறுகிய காலக்கட்டத்திலேயே வடிகால் பணிகளை மேற்க்கொள்வதற்காக பல இடங்களில் தோண்டி சேதப்படுத்தப்படுகிறது.

பல இடங்களில் தற்போது கருப்புநிறக்குழாய்கள் அமைத்திட சாலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு பகுதியில் என்னென்ன வசதிகள் செய்யப்பட இருக்கின்றன என்பது மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியும்...அப்படியிருக்கும் சூழலில் இதுபோன்ற நடவடிக்கை பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட வேண்டும் என்றஎண்ணத்திலோ அல்லது தனிநபர்கள் ஆதாயம் அடைய வேண்டும் என்ற நோக்கத்திலோமாநகராட்சி நிர்வாகம் செயல்படுகிறதோ என பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தற்போது பல பகுதிகளில் புதிதாக போடப்பட்ட சாலைகளை உடைத்து கருப்பு நிறக்குழாய்கள் பதிக்கப்படுகிறது அப்படியெனில் ஏற்கனவே பதிக்கப்பட்ட கருப்புநிறக் குழாய்கள் என்னவாயிற்று??? கருப்புநிறக் குழாய்கள் பதிக்கப்படுவதில் முறைகேடு ஏற்பட்டுள்ளதோ என பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது??! தமிழக அரசு உரிய விசாரணை செய்து பொதுமக்கள் வரிப்பணம் வீணாக்கப்படாமல் இருந்திட தேவையான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

gajageswariFeb 27, 2025 - 05:41:37 AM | Posted IP 172.7*****

அரசு என்றால் வீண்டடிப்பது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் உள்ள குடிநீர் திட்டம் நன்றாக உள்ளது ஆனால் புதிதாக நடைமுறை படுத்த பல கோடி வீண்செலவு

tutyiyanFeb 25, 2025 - 12:37:20 PM | Posted IP 172.7*****

thoothukkudiyil entha aatchi vanthaalum katchigal ondrum marave illai.. road podrathuku munnadi entha velaiyum seirathu kedayathu, potathuku apuram road thonda vendiyathu.. makkal varipanam veen virayam sila athigarigal aatchiyil irukiravargal commissionukaga kaasukaga intha velaiyai seiranga

JABEZ DEVAGNANAMFeb 25, 2025 - 08:54:46 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடி ஸ்டெர்லைட் இருக்கும்போது ஸ்டெர்லைட் வேண்டும் என்று போராடிய நபர்களில் முதன்மையான நபராக இருந்துவிட்டு இன்று மக்கள் முன்பு கபட நாடகமாடுவது வேடிக்கையான ஒன்று

ஆதிFeb 23, 2025 - 06:47:41 PM | Posted IP 162.1*****

கருத்த பாலம் முதல் கடைசி திரேஸ்புரம் பாலம்வரை போடப்பட்ட சிமெண்ட் ரோடு எல்லாமும் சேதமாகி உள்ளது பாதை போட்டு ஒரு வருடம் தான் ஆகிறது அதற்குள் எல்லா வழித்தட சிமெண்ட் பாதையும் சீரின்றி போய்விட்டது இன்னும் ஒரு மழைக்காலம் வந்தால் அவ்வளவு பாதையும் பெயர்ந்து வந்துவிடும் ஆக ஆக சம்பந்தப்பட்ட காண்ட்ராக்ட் காரர்கள் மீண்டும் அதே சிமெண்ட் ரோடு சரி செய்ய சரி செய்து தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் மீது எங்கு புகார் போட வேண்டும் என்று தெரியவில் லை

அதிFeb 23, 2025 - 08:58:58 AM | Posted IP 172.7*****

பொறுப்பான நிர்வாகம் என்றால், மாநகராட்சியின் பணிகள் நடைபெறும் இடங்களில் பணிகள் குறித்த விவரப்பலகைகளை மக்கள் அறிய வைக்கவேண்டும்.மாநகராட்சியின் வெளிப்படையான இச்செயல் மக்களின் நம்பிக்கையை பெறுவதோடு மட்டுமின்றி ஒத்துழைப்பையும் பெற்றுத்தரும்.

அதிFeb 23, 2025 - 08:49:28 AM | Posted IP 162.1*****

பக்கிள் ஓடையின் இருபுற சிமெண்ட் ரோடுகளும் மழைக்கு தாங்காமல் சேதமடைந்து மோசமான நிலையில் இருசக்கர வாகனங்களுக்கு ஏற்ற நிலையில் இல்லாமல் உள்ளன.

ராஜாராம்Feb 22, 2025 - 08:42:10 PM | Posted IP 162.1*****

ஸ்மார்ட் சிட்டி ரோடுகளை உடைக்க இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தார்கள்?

அண்பன்Feb 22, 2025 - 07:46:26 PM | Posted IP 172.7*****

மாநகராட்சி பணிகள் குறித்து ஆணையர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

ஏரியா காரன்Feb 22, 2025 - 05:30:31 PM | Posted IP 162.1*****

இப்போ இருக்கும் சிமெண்ட் சாலைகளை கவனிக்கத் துப்பில்லை , மண் தேங்கி இருக்கு , சேதமடைந்து இருக்கு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory