» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாரத சாரண, சாரணிய இயக்க சிந்தனைநாள் விழா: விழிப்புணர்வு பேரணி
சனி 22, பிப்ரவரி 2025 3:14:17 PM (IST)

தூத்துக்குடியில் சாரணர் தின விழாவை முன்னிட்டு சாரண, சாரணிய இயக்க சிந்தனைநாள் விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடியில் மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் நிறுவனர் பேடன்பவுல் பிறந்த தினம் மறவன்மடம் பிஷப் கால்டுவெல் கல்லூரியில் வைத்து 3 நாட்கள் நடைபெற்றது. விழாவினை தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கண்ணன் தொடங்கி வைத்தார். இரண்டாம் நாள் விழாவில் பள்ளிகளுக்கிடையே சாரண, சாரணிய இயக்கம் சார்ந்த பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 20 பள்ளிகளிலிருந்து 390 சாரண, சாரணியர்கள் மற்றும் 25 சாரண, சாரணியப் பொறுப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர். மூன்றாம் நாள் விழாவில் தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் சிந்தனைநாள் விழிப்புணர்வு பேரணி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து நடைபெற்றது.
சிந்தனைநாள் பேரணியை துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீரா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்டப் பாரத சாரண, சாரணிய இயக்கச் செயலாளர் செ.எட்வர்ட் ஜாண்சன் பால் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீரா சிறப்புரையாற்றியாற்றினார்.
மேலும் மணப்பாறையில் நடைபெற்ற பாரத சாரண, சாரணிய இயக்க வைரவிழா பெருந்திரளணியில் கலந்து கொண்ட பள்ளிகளைச் சார்ந்த தலைமையாசிரியர்களை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டன. பேரணியில் பங்கு பெற்ற சாரண, சாரணியர்களுக்கு தூத்துக்குடி வேலவன் ஹைப்பர் மார்க்கெட் நிறுவனர் ஆனந்தன் சிற்றுண்டி வழங்கி சிறப்பித்தார். சிந்தனை நாள் விழாவில் நடைப்பெற்ற போட்டிகளில் பல பள்ளிகள் சிறப்பாக பங்கு பெற்று பரிசுகள் பெற்றனர்.
சாரணர் பிரிவில் முதல் இடத்தை ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் இரண்டாம் இடத்தை டிடிடிஏ பி.எஸ்.பெரியநாயகம் மேல்நிலைப் பள்ளியும், சாரணியர் பிரிவில் முதல் இடத்தை சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், இரண்டாம் இடத்தை ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் பிஷப் கால்டுவெல் கல்லூரி முதல்வர் பொறுப்பு ஜெயா கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற பள்ளிகளைச் சார்ந்த சாரண, சாரணியர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
தேசியப் பயிற்சியாளர்கள் செல்வி, அற்புதமேரி, ராஜசேகர் ராஜகோபால், கிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டு சாரண, சாரணியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
சிந்தனைநாள் விழா ஏற்பாடுகளை மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கச் செயலாளர் செ.எட்வர்ட் ஜாண்சன் பால், மாவட்ட இணைச் செயலாளர் சகாயமேரி வீனஸ், மாவட்ட ஆணையர் பி.சரவணன், மாவட்ட ஆணையர் (சாரணியர்) பி.சங்கரேஸ்வரி, மாவட்ட பயிற்சி ஆணையர் ஆ.ஜெயாசண்முகம், மாவட்ட பயிற்சி ஆணையர் (சாரணர்) கார்த்திக், மாவட்ட அமைப்பு ஆணையர் அல்பர்ட் தினேஷ் சாமுவேல் (சாரணர்), மாவட்ட அமைப்பு ஆணையர் வள்ளியம்மாள் (சாரணியர்), மாவட்டப் பொருளாளர் ஜான் சௌந்திரராஜ ஆகியோர் மற்றும் ரா.ச.பிரியங்கா, சுகுணா தேவி, பார்ஜின் ஆகிய சாரண, சாரணியப் பொறுப்பாசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)










