» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி!
சனி 22, பிப்ரவரி 2025 11:30:08 AM (IST)

தூத்துக்குடியில் லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர்களுக்கான திறன் மற்றும் தொழில் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
தூத்துக்குடியில் Shell NXplorers, மத்திய அரசின் நிதிஆயோக், அடல் இன்னோவேஷன் மிஷன் மற்றும் லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், Shell NXplorers என்னும் திறன் மேம்பாடு, பிராப்ளம் சால்விங் ஸ்கில், கிரிட்டிக்கல் திங்கிங் என்னும் பயிற்சி நடந்தது. இதில் 19 அடல் டிங்கரிங் லேப் பள்ளிகளை சேர்ந்த 29 ஆசிரியர்கள் பங்குபெற்றனர்.
தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர்களின் மேம்பாடு மற்றும் நிகழ்வின் முக்கியத்துவம், ஆசிரியர்கள் எவ்வாறு கற்பிக்க வேண்டும், அடல் ஆய்வகத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை குறித்தும் உரையாற்றினார். மேலும் இந்த நிகழ்வின் மூலம் பிராப்ளம் சால்விங் ஸ்கில், க்ரியேடிவ் திங்கிங் போன்ற திறன்கள் மேம்படுவதாகவும், செயல்முறை கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட உதவி திட்ட அலுவலர் முனியசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சத்தியசீலன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அனிதா, ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை லேர்னிங் லிங்க்ஸ் பௌண்டேஷன் மற்றும் Shell NXplorers குழுமத்தினர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)










