» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா : அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு
சனி 22, பிப்ரவரி 2025 11:16:30 AM (IST)

தூத்துக்குடியில் நடைபெறற சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கூடுதல்ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி பெர்னாண்டோ வரவேற்றார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் காயத்ரி திட்ட விளக்க உரையாற்றினார்.
விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சமூக நல அலுவலர் பிரேமலதா, மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டாசெல்வராஜ், மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், வடக்கு மண்டல தலைவர் நிர்மல் ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)










