» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற மாணவிக்கு பாராட்டு விழா!

சனி 22, பிப்ரவரி 2025 10:33:54 AM (IST)



டெல்லியில் 76-வது குடியரசு தின விழா பேரணியில் பங்கேற்று திரும்பிய நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவி சுபித்ராவுக்கு பாராட்டு விழா நடந்தது.

பள்ளிச் செயலர் மேனாள் பேராசிரியர் பால்பாண்டியன் அனைவரையும் வரவேற்றார்.தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். உறவின் முறை தலைவர் காசிராஜன், .பள்ளி தலைவர் தங்கமணி, பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் மாரி கண்ணபிரான், உறவின் முறை செயலர் பாஸ்கர், பொருளாளர், வேல்முருகன் மற்றும் சென்னை சிவசக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தூத்துக்குடி என்.சி.சி.சுபைதார் சந்திரசேகர், முதுகலை தமிழ் ஆசிரியை உமா மகேஸ்வரி, பள்ளி புரவலர் மதிமாரியப்பன்,பள்ளி புரவலர் & உறவின்முறை உறுப்பினர், படிப்பக நிர்வாகி செல்வராஜ சோழன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவியை பாராட்டி வாழ்த்தி பேசினர். தொடர்ந்து பள்ளி என்.சி.சி. அதிகாரி ஜான்ஸ்டானி  பள்ளி மாணவி சுபித்ராவுக்கு தங்கப்பதக்கம் வழங்கியும், மேனாள் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் தெய்வேந்திரன் நினைவு பரிசு வழங்கியும் பாராட்டினர். 

மேனாள் பள்ளி செயலர் திராவிடமணி, சென்னை சொர்ண மாரிப்பாண்டியன், ராமர், முருகேச பாண்டியன், சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிக்கு மகுடம், ரொக்கப்பரிசு, பொன்னாடை அணிவித்து பாராட்டினர். மாணவி சுபித்ரா டில்லியில் நடந்த குடியரசு பேரணியில் பங்கு பெற்றது பிரதமர் மோடியிடம், தமிழக கவர்னரிடம் மற்றும் என்.சி.சி. உயர் அதிகாரிகளிடம் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் விவரித்து நன்றி கூறி பேசி ஏற்புரை நிகழ்த்தினார். முடிவில் பள்ளி என்.எஸ்.எஸ். அதிகாரி கவுதமன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory