» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்: தமிழக முதல்வருக்கு கோரிக்கை
சனி 22, பிப்ரவரி 2025 8:46:43 AM (IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என தமிழ்நாடு மக்கள் வாழ்வாதர பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் தியாகராஜன், செயலாளர் கணேசன், இணை செயலாளர் சிந்தா ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஒரு சிலரின் தவறான புரிதல் மற்றும் அந்நிய சதியால் நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக மூடப்பட்டது.
ஆலை மூடியதன் காரணமாக அப்பாவி தொழிலாளர்கள் சுமார் 20,000-க்கு மேல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். அதே போன்று ஆலையின் ஒப்பந்தகாரர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள், 400-க்கு மேற்பட்ட சிறு, குறு தொழிலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லாம் பத்திரிக்கை மூலம் ஆலையை திறக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அன்மையில் வேலூர் பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளால் ஏற்பட்ட மாசு காரணமாக, அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்கள், ஆகியோரது வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது பிறப்பித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் விதிமுறைகளை முறையாக பின்பற்றி தொழற்சாலைகள் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த ஆலையை மூட உத்திரவிடவில்லை.
ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அப்படி யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதற்கான சான்றினை இதுவரை யாரும் சமர்ப்பிக்கவில்லை. வெறும் வதந்தியின் காரணமாக ஏற்பட்ட போராட்டத்தில் நடைபெற்ற துரதிஷ்டவசமான துப்பாக்கி சூட்டால் ஆலை மூடப்பட்டுள்ளது. நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளது போல் "கூட்டமாக தவறு செய்தால் அது நியாயப்படுத்தப்படுகிறது தனித்து நேர்மையாக செயல்பட்டால் அது குற்றமாக்கப்படுகிறது" என்பதற்கு ஸ்டெர்லைட் ஆலை மூடல் எடுத்துக்காட்டாகும்.
ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனால் பாதிப்புக்கு உள்ளானதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்ட இடங்களையெல்லாம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த (NGT) தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் "வலுவான காரணமின்றி ஆலை மூடப்பட்டுள்ளது என்று தெரிவித்து சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க உத்திரவிட்டுள்ளதை" அரசு கருணையுடன் பரிசீலனை செய்ய வேண்டுகிறோம்.
அரசும் சரி, உச்சநீதிமன்றமும் சரி ஒருமுறை எடுத்த முடிவை /தீர்ப்பை சில ஆண்டுகளுக்குப் பின் தேவைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாற்றி அமைப்பது நடைமுறையில் உள்ளது. எனவே, தமிழக அரசு இதனை கெளரவப் பிரச்சனையாக கருதாமல், ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் தமிழகத்தின் தொழில், பொருளாதார வளர்ச்சியினை கருத்தில் கொண்டு, ஒரு நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து நல்ல முடிவு எடுக்க பணிவுடன் வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
JockinFeb 24, 2025 - 09:11:11 PM | Posted IP 172.7*****
முடிஞ்ச மோடி ஊருக்கு குஜராதுக்கு மாறட்டும்
JockinFeb 24, 2025 - 09:08:33 PM | Posted IP 162.1*****
முடிஞ்சது முடிஞ்சு போச்சு இனி இரத்தம்
இறந்தவர்களின் நினைவு பூங்கா அமைக்க முதல்வற்கு கடிதம் அனுப்ப வேண்டும்
ஜெயசீலன் தூத்துக்குடிFeb 24, 2025 - 06:35:36 PM | Posted IP 162.1*****
தாராளமாக அவர்களின் வீடுகளின் அருகில் வைத்துக் கொள்ளுங்கள்
MuthuFeb 24, 2025 - 03:41:57 PM | Posted IP 162.1*****
No open starlight No opening starlight
GajageswariFeb 24, 2025 - 05:13:57 AM | Posted IP 162.1*****
நல்ல நியாமான கோரிக்கை. நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்ற வேண்டும்
B. Rudalph FernandoFeb 23, 2025 - 11:17:18 PM | Posted IP 162.1*****
இந்த பதிப்பில் வெளிவந்த எல்லாம் ஆலைக்கு சாதகமான ( காசு வாங்கி கொண்டு ) செய்தி தானே ... இனி இவர்கள் எந்த முயற்சி செய்தாலும் இந்த விச கொல்லி ஆலையை மீண்டும் திறக்க முடியாத காரியமாகும்...
ArunFeb 23, 2025 - 10:46:11 PM | Posted IP 162.1*****
ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் அதுக்கு தான் இனி போடனும். கதம் கதம்.
முருகன்Feb 23, 2025 - 09:59:31 PM | Posted IP 172.7*****
தூத்துக்குடியிலிருந்து குஜராத்துக்கு மாற்றிவிடுங்கள்.
தூத்துக்குடி காரன்Feb 23, 2025 - 09:32:02 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடிக்கு தேவை இல்லாத ஒன்று ஸ்டெர்லைட் வேண்டும் ஆனால் தேவை படும் மாநிலத்துக்கு ஸ்டெர்லைட் செல்லட்டும்
ஐூடுFeb 23, 2025 - 08:37:48 PM | Posted IP 162.1*****
ஸ்டெர்லைட் வேண்டாம்
SureshFeb 23, 2025 - 02:14:04 PM | Posted IP 162.1*****
After shut off Sterlite Tuticorin having good monsoon.We don't want pollution. Sterlite giving all good means please open all other states.
கிருபா நிதிFeb 23, 2025 - 02:05:33 PM | Posted IP 172.7*****
சுற்றுச்சூழல் மாசு தடுக்க எந்த அறிவியல் முயற்சியையும் எடுக்க பொறியியல் கல்லூரி உட்பட எவரும் முயற்சிக்காதது தமிழின சவலைத்தனம் மற்றும் உரத்த வெற்றுப்பேச்சு
என்னதுFeb 23, 2025 - 12:11:14 PM | Posted IP 172.7*****
தமிழக மொதல்வருக்கு கோரிக்கையா ? அது நாடக கம்பெனி ஆச்சே .
ஓட்டு போட்ட முட்டாள்Feb 23, 2025 - 12:10:00 PM | Posted IP 172.7*****
இப்போ இருக்கும் கட்சிகள் தான் உருப்படியாக மூடாது , அப்பாவி மக்களை சண்டைக்கு இழுத்து சாவடிசிடுவாங்க
SugummarFeb 23, 2025 - 11:52:37 AM | Posted IP 172.7*****
Factory moodiyaythu moodiyeirukattum.
SathyanFeb 23, 2025 - 10:31:35 AM | Posted IP 172.7*****
Sterlite owner mind voice
SeyedFeb 23, 2025 - 08:50:04 AM | Posted IP 162.1*****
ஊர்ல வேலைஇல்லாதவங்க அதிகமா யாரு சொன்னா? பின்ன எதுக்கு வடக்கனுங்க வாரானுவ.இருக்குற வேலைய பாருங்கப்பா. மீண்டும் மக்கள சாவடிக்கிற ஆலைகள் வேண்டாம்.
XavierFeb 23, 2025 - 07:37:17 AM | Posted IP 172.7*****
One way
AntonysamyFeb 22, 2025 - 06:00:35 PM | Posted IP 162.1*****
இது சுயநலம் உள்ள கோரிக்கை
AnbuFeb 22, 2025 - 05:07:07 PM | Posted IP 172.7*****
எடுத்த முடிவே சரிதானே .மீண்டும் என்னத்த புடுங்கனுமா அவனவன் வேலைக்கு ஆளில்லாமல் வடக்கன்ஸ்ச வச்சி ஒப்பேத்துரான் .இப்ப வேலை இங்குள்ளவனுக்கா இல்லை கும்பமேளாவுல இருக்கிறவனுக்கா
மேலும் தொடரும் செய்திகள்

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)











SelvakumarFeb 26, 2025 - 09:12:09 AM | Posted IP 172.7*****