» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு : பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சனி 22, பிப்ரவரி 2025 8:25:04 AM (IST)

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்தால் ‘போக்சோ’ மாநிலமாக மாறிவிடும் என தமிழக அரசை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

தூத்துக்குடியில் பாஜக முன்னாள் மாநில பொதுச் செயலர் சரவணப்பெருமாள் 8ஆம் ஆண்டு நினைவு தின அனுசரிப்பு, ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்ற பரப்புரை தொடக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் பாஜக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், பங்கேற்ற பொன். ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் உள்ளிட்ட சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தமிழக அரசு விரைந்து கட்டுப்படுத்தவில்லையெனில், இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு ‘போக்சோ’ மாநிலமாக மாறிவிடும். இதே நிலை நீடிக்குமேயானால், 2026-க்குள் இந்த ஆட்சி இல்லாமல் போய்விடும்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொது இடங்களில், பொறுப்புடன் பேச வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்த பின்னதான், இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எல்லை குறித்த பிரச்னைகளை கனிவுடன் அணுக வேண்டும். அவற்றுக்கு சில கால அவகாசம் தேவை என்றார்.

இந்நிகழ்வில், மாவட்டத் தலைவர்கள் சித்ராங்கதன்(தெற்கு), சரவண கிருஷ்ணன் (வடக்கு), மருத்துவப் பிரிவு மாநிலச் செயலர் ருக்மணி, வர்த்தகப் பிரிவு மாநிலத் தலைவர் ராஜகண்ணன், ஓபிசி அணி மாநில துனைத் தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்டபொதுச்செயலர் ராஜா சத்தியசீலன், வடக்கு மாவட்டபொதுச்செயலர் வேல்ராஜா மாவட்ட துணைத் தலைவர்கள் செல்வராஜ், சிவராமன், வாரியார், தங்கம் சரஸ்வதி உள்பட பலர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory