» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடை செய்யப்பட்ட 21 சங்குகள் பறிமுதல்: ஒருவர் கைது

சனி 22, பிப்ரவரி 2025 8:19:34 AM (IST)



திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் தடை செய்யப்பட்ட 21 சங்குகளை விற்பனைக்காக வைத்திருந்ததாக ஒருவரை வனத் துறையினர் கைது செய்தனர்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் தடை செய்யப்பட்ட விலை மதிப்புள்ள சங்குகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் கவின் தலைமையில் வனவர் ரகு, வனக்காவலர் அபிஷேக், வனக்காப்பாளர்கள் முகமது பைசல் ராஜா உள்ளிட்டோர் கடற்கரை பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது, ஆலந்தலை, சுனாமி காலனியை சேர்ந்த அந்தோணிராஜ் (51) என்பவர், தடை செய்யப்பட்ட 2 மாட்டுத்தலை சங்குகள், 18 குதிரை மொழி சங்குகள், 1 நட்டுவாகாலி சங்கு என மொத்தம் 21 சங்குகள் வைத்திருந்தது தெரியவந்தது. அவரை வனத்துறையினர் பறிமுதல் செய்து, சங்குகளை கைப்பற்றினர்.


மக்கள் கருத்து

இது தான்Feb 22, 2025 - 05:33:05 PM | Posted IP 172.7*****

இவர்களை போன்ற கடல் வளங்களை ஆட்டையப்போடும் மீனவ கும்பல்களால் கடல் வளங்கள் அழிந்து வருகிறது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory