» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் தமிழக அரசின் புதிய நடைமுறை அமல்!

செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 10:00:11 AM (IST)



தூத்துக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவண எழுத்தர்களை தடுக்கும் வகையில் உரிமம் பெற்ற ஆவண எழுத்தரின் விவரங்கள் புகைப்படத்துடன் இணைத்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. 

சார்-பதிவாளர் அலுவலகங்களில் நியாயமான, நேர்மையான, அலுவலக நடைமுறைகளை பின்பற்ற, வெளி ஆட்களை பத்திர பதிவு அலுவலகத்துக்குள் அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு தமிழகம் முழுவதும் ஏற்கனவே அமலில் உள்ளது. ஆனாலும், அந்த உத்தரவை யாரும் பின்பற்றுவதில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சார் பதிவாளர் அலுவலகங்களில், துறைக்கே தொடர்பு இல்லாத நபர்கள், இடைத்தரகர்கள் சிலர் பத்திர எழுத்தர்கள் என்ற பெயரில் அலுவலகப் பணிகளில் குறுக்கிடுவதாக புகார் எழுந்தது. 

இது தொடர்பாக பொது மக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இது குறித்து, தூத்துக்குடியைச் சேர்ந்த பத்திர எழுத்தர்கள் சிலர் கூறுகையில்,'சார் பதிவாளர் அலுவலகத்தில் அலுவலகத்திற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் வந்து செல்கிறார்கள். பதிவு செய்யாத எழுத்தர்கள், சில வழக்கறிஞர்களின் உதவியாளர்கள் என்று கூறிக் கொண்டு ஸ்கேன் அறை வரை வந்து செல்கிறார்கள். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.  இந்நிலையில், பதிவு அலுவலர்களால், பதிவு செய்யப்பட்ட எழுத்தர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், பொதுமக்களின் வசதிக்காகவும், உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களை அடையாளம் காண்பதில் உறுதுணையாகவும் இருக்கும் வண்ணம், அனைத்து பதிவு அலுவலகங்களிலும் அவ்வலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவண எழுத்தர்களின் பெயர், உரிம எண், கைப்பேசி எண் அடங்கிய விவரங்களை ஆவண புகைப்படத்துடன் இணைத்து பொது மக்கள் அறியும் வண்ணம் அறிவிப்பு பலகையில் தெரிவித்திட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதையடுத்து தூத்துக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவண எழுத்தர்களை தடுக்கும் வகையில் உரிமம் பெற்ற ஆவண எழுத்தர் பெயர், உரிம எண், கைப்பேசி எண் அடங்கிய விவரங்கள் ஆவண எழுத்தர்களின் புகைப்படத்துடன் அறிவிப்பு பலகையில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவால் பத்திர எழுத்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


மக்கள் கருத்து

m.sundaramAug 28, 2024 - 07:59:01 PM | Posted IP 162.1*****

This is all in paper only. Ground reality is negative. Why document writer is allowed to go inside the registration office? They are acting as a middle man for the sub registrar. nowadays lawyers are performing the duty of document writer as this job is lucrative as the job of arguing in the court requires deep knowledge about various law which the present generation lacks.

சண்முகம்Aug 28, 2024 - 06:06:31 PM | Posted IP 172.7*****

ஆவண எழுத்தரும் வழக்கறிஞரும் அனுமதிக்க கூடாது . பாஸ் போர்ட் அலுவலகம் அனுமதிக்கிறதா ?. எழுதி கொடுப்பவர்கள் எழுதி பெறுபவர்கள் சாட்சிகள் முன்பதிவு நேரப்படி அனுமதி அளிக்க வேண்டும்.

VINOTHAAug 28, 2024 - 11:09:30 AM | Posted IP 172.7*****

WORST SERVICE IN TUTICORIN . FULL OF MONEY MIND

NameAug 27, 2024 - 07:49:15 PM | Posted IP 172.7*****

Extra kasu vangura payalugal mela dvac action yedukanum

JalalyudinAug 27, 2024 - 03:59:41 PM | Posted IP 172.7*****

Cash vangamal first Registration panna solunga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory