» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஜேசிஐ குயின் பீஸ் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி

புதன் 24, ஏப்ரல் 2024 8:12:13 PM (IST)



தூத்துக்குடியில் ஜேசிஐ குயின் பீஸ் அமைப்பின் சார்பில் காது கேளாத வாய் பேச முடியாத மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. 

தூத்துக்குடியில் ஜேசிஐ-யின் கிளை அமைப்பாக குயின் பீஸ் அமைப்பின் சார்பில் தூத்துக்குடியில் உள்ள குட் ஷெப்பர்ட் காது கேளாத வாய் பேச முடியாத பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.‌ இந்த பயிற்சி முகாமி 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.  

பயிற்சி முகாமில் அவர்களுக்கு மாணவர்களின் தனித் திறமையை வெளிக்கொணரும் வகையிலும் அவரது வாழ்க்கையில் தன்னம்பிக்கை மற்றும் வருமானத்தை ஈட்டக்கூடிய நிலையை உருவாக்க சிலம்பம் ,ஜும்பா நடனம், மற்றும் காகிதத்தால் பை தயார் செய்வது, கீழே போடப்படும் பாட்டில்களை கொண்டு அதை அழகுப் பொருளாக மாற்றி மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது, ஐஸ் குச்சிகளைக் கொண்டு அலங்காரப் பொருட்கள் தயாரிப்பது, அட்டையில் போட்டோ ஆல்பம் தயாரிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது.  


இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் தயார் செய்த பொருட்களை பார்வைக்கு வைத்திருந்தனர். பயிற்சி முகாம் நிறைவு விழாவில் ஜேசிஐ மண்டல தலைவர் சிபி மற்றும் குயின் பீஸ் தலைவர் மதுமிதா  ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை பாராட்டி கௌரவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory