» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமூக வலைதளத்தில் தவறான தகவல் பதிவிட்டால் நடவடிக்கை : எஸ்பி பாலாஜி சரவணன் எச்சரிக்கை

ஞாயிறு 5, மே 2024 12:07:48 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய புகார் மனு விசாரணை  குறித்து சமூக வலைதளத்தில் தவறான தகவலை பதிவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு சம்பந்தமாக சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

மேற்படி புகார் மனுவில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவர் சிறுமி என்பதாலும் மேலும் இது கணவன், மனைவி மற்றும் அவர்களுடைய உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை சம்பந்தப்பட்டது என்பதாலும் இது சம்பந்தமாக காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் குழந்தைகள் நல குழுமம் (Child Welfar Committee) மற்றும் பெண் காவல் ஆய்வாளர் ஆகியோர்கள் அடங்கிய குழுவை கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேற்படி மனு மீதான விசாரணையின் உண்மைத்தன்மை தெரியாமல் அதுகுறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவலை பதிவிட வேண்டாம் எனவும் மீறி பதிவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory