» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வழக்கறிஞருக்கு அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

புதன் 17, ஏப்ரல் 2024 10:01:04 AM (IST)

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ரூ.20,000 வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சார்ந்த வழக்கறிஞர் மகேஷ் குமார் என்பவர் சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளைக்கு செல்வதற்காக அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்தில் பயணம் செய்துள்ளார். மேற்படி பேருந்து திருமங்கலத்தை தாண்டி கப்பலூர் டோல் கேட்டில் கட்டணம் செலுத்துவதற்காக நிறுத்தப்பட்டது. பாஸ்ட்டிராக்கில் பணம் கையிருப்பு இல்லாததால் 20 நிமிடங்களாக கப்பலூர் டோல் கேட்டிலேயே பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டது. 

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் உரிய நேரத்தில் மதுரைக்கு செல்ல இயலாமல் பரிதவித்துள்ளனர். மனுதாரரும் 20 நிமிடங்கள் காலதாமதமாக உயர் நீதிமன்ற கிளைக்கு சென்றடைந்துள்ளார். அதற்குள் நீதி மன்றம் துவங்கி விட்டது. அரசுப் போக்குவரத்து கழகத்தின் சேவை குறைபாட்டால் நீதிமன்ற பணிக்கு உரிய நேரத்தில் செல்ல இயலாததால் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து மன உளைச்சலுக்கு ஆளான வழக்கறிஞர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர்,  நமச்சிவாயம் ஆகியோர் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 10,000, வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் ரூபாய்; 20,000 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory