» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

வியாழன் 1, டிசம்பர் 2022 11:40:54 AM (IST)தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் தலைமையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும், உலக சுகாதார மையத்தின் சமப்படுத்துதல் கொள்கையின் படி சுமார் 150 மருத்துவ மாணவர்களுக்கு கூட்டு மருத்துவ சிகிச்சை முறை மற்றும் நோய் தொற்று தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பொது மருத்துவத்துறை தலைவர் மற்றும் ஏஆர்டி மைய நோடல் ஆபீசர் சரவணன், நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் மருத்துவர் ஜெயமுருகன், நெஞ்சக நோய் பிரிவு துறை தலைவர் சங்கமித்ரா, ஏஆர்டி மைய மருத்துவ அலுவலர்கள் குழந்தைராஜ், சூர்யா, மருத்துவமனை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், துணை கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, மற்றும் பல்வேறு துறை தலைவர்கள், மருத்துவர்கள் பங்கேற்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory