» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்: ஏப்.29ம் தேதி தொடங்குகிறது

சனி 27, ஏப்ரல் 2024 8:49:16 AM (IST)

தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.29ம் தேதி  (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தூத்துக்குடி மாவட்ட பிரிவு சார்பில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி மற்றும் கைப்பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய விளையாட்டுகளில் 2024-ம் ஆண்டுக்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.29ம் தேதி  (திங்கட்கிழமை) துவங்குகிறது. 

காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் என இருவேளைகளிலும் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது.  மே 13ஆம் தேதி வரை இம்முகாம் நடக்கிறது. ஆண்களுக்கான ஆக்கி பயிற்சி மட்டும் கோவில்பட்டி செயற்கை இழை ஆக்கி மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க ரூ.236 பயிற்சி கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

இந்த பயிற்சி முகாமில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், ஜார்ஜ் சாலை, தூத்துக்குடி, போன்- 0461- 2321149, செல்போன் 74017 03508 என்ற முகவரியில் அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory