» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : ரஜினிகாந்த் பதில்

வியாழன் 22, ஏப்ரல் 2021 5:08:12 PM (IST)

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக தன்னிடம் ஆதாரம் எதுவுமில்லை என நடிகர் ரஜினிகாந்த் ஆணையத்திடம் பதிலளித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கினை அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, ரஜினிகாந்திடம் விசாரணை ஆணையம் சார்பாக 15 கேள்விகள் கேட்கப்பட்டன அந்த 15 கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாக ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார். மேலும், தூத்துக்குடி கலவரம் தொடர்பாக தன்னிடம் ஆதாரம், ஆவணம் எதுவுமில்லை என ரஜினி பதிலளித்துள்ளதாக ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் கூறியுள்ளார். மேலும், ரஜினியிடம் கட்டாயம் விசாரணை நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam






Black Forest Cakes

Thalir Products



Thoothukudi Business Directory