» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓடை பாலத்தில் தவறி விழுந்து டிரைவர் சாவு : பஸ்சுக்காக காத்திருந்தபோது பரிதாபம்
வெள்ளி 23, ஜனவரி 2026 8:27:22 AM (IST)
நாலாட்டின்புத்தூர் அருகே பஸ்சுக்காக ஓடைப்பாலத்தில் உட்கார்ந்து இருந்த டிரைவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். .
நெல்லை மாவட்டம் செட்டிகுளம் சீவலப்பேரி ரோடு பகுதியை சேர்ந்த குருசாமி மகன் ரமேஷ்பாபு (45). டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கல்பனா (39). இவர்களுக்கு குருபரதன் (15) என்ற மகன் உள்ளார். ரமேஷ்பாபு நேற்று முன்தினம் வேலை நிமித்தமாக கோவில்பட்டிக்கு வந்துள்ளார். பின்னர் நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள தனியார் டைல்ஸ் கம்பெனி அருகில் நெல்லை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நெல்லை செல்வதற்காக அப்பகுதியில் உள்ள ஓடைப்பாலத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அந்த பாலத்தில் இருந்து தவறி பின்னால் உள்ள பள்ளத்தில் விழுந்துள்ளார். சுமார் 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்ததால் தலையில் படுகாயம் அடைந்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிமுத்து மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று, படுகாயங்களுடன் கிடந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலையில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி உப்பளங்களில் சீரமைப்பு பணிகள் தீவிரம்: 25 லட்சம் டன் உப்பு உற்பத்திக்கு இலக்கு
வெள்ளி 23, ஜனவரி 2026 3:56:03 PM (IST)

தைப்பூசத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் : இந்து முன்னணி கோரிக்கை!
வெள்ளி 23, ஜனவரி 2026 3:19:39 PM (IST)

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீத்தடுப்பு செயல்முறை விளக்கப் பயிற்சி!
வெள்ளி 23, ஜனவரி 2026 3:13:56 PM (IST)

தன்பாடு உப்பு தொழிலாளர்கள் சங்க கட்டிடம் திறப்பு விழா : மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
வெள்ளி 23, ஜனவரி 2026 3:03:15 PM (IST)

தூத்துக்குடியில் 16வது தேசிய வாக்காளர் தினம் : ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 23, ஜனவரி 2026 12:11:06 PM (IST)

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அமமுக முன்னாள் துணை பொதுச்செயலாளார்!
வெள்ளி 23, ஜனவரி 2026 11:07:06 AM (IST)








