» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தன்பாடு உப்பு தொழிலாளர்கள் சங்க கட்டிடம் திறப்பு விழா : மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

வெள்ளி 23, ஜனவரி 2026 3:03:15 PM (IST)



தூத்துக்குடியில் தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் கட்டிடத்தை மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார். 

விழாவில் மேயர் பேசுகையில், "தூத்துக்குடி மாநகரின் பிரதானமான அடையாளமும் தொழிலுமான உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள தூத்துக்குடி தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் கட்டிடத்தை கலைஞரின் முரட்டு பக்தரும் எனது தந்தையாரும் சங்கத்தின் முன்னாள் பொது செயலாளருமான என்.பெரியசாமி நினைவாக அவரது பெயரில் என்.பெரியசாமி இல்லம் என்ற புதிய சங்க கட்டிடத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி என்று பேசினார்.

விழாவில் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் ஆறுமுகநயினார், மாவட்ட பொருளாளர் சுசீ ரவீந்திரன், பொது குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, நிர்வாகி ஏசுவடியான்,பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், துணை தலைவர்கள் முருகன், தாத்தா சாமி, துணை செயலாளர்கள் ஹரி ராமன், பிரைட்டன், வட்ட பிரதிநிதி பாலரூபன், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory