» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அமமுக முன்னாள் துணை பொதுச்செயலாளார்!

வெள்ளி 23, ஜனவரி 2026 11:07:06 AM (IST)

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் துணை பொதுச்செயலாளர் எஸ்விஎஸ்பி மாணிக்கராஜா,திமுகவில் இன்று காலை இணைந்தார்.

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/ManikkarajaDMK_1769146693.jpgதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தீவிர களப்பணியாற்றி வருகின்றன. இந்தச் சூழலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) அமமுக இணைந்தது. இந்தக் கூட்டணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் அமமுகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் மாணிக்கராஜா திமுகவில் இணைந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார். அவருடன் அமமுக மாவட்டச் செயலாளர்கள் மூவர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவருடன் தென்மாவட்டங்களைச் சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்களும் தி.மு.க.வில் இணைந்தனர். 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்க ராஜா, "தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வில் இணைந்துள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படி இருக்கும்போது, 8 ஆண்டுகள் கஷ்டபட்டு வளர்த்த அ.ம.மு.க.வை மறுபடியும் பழைய நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தும் அ.ம.மு.க. தலைமை கேட்கவில்லை.

பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தினகரன் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் விருப்பப்படி தி.மு.க.வில் இணைந்துள்ளோம். 3 மாவட்ட செயலாளர்கள் தற்போது வந்துள்ளார்கள். விரைவில் மற்றவர்கள் வருவார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு அர்த்தமில்லாத தலைமையில் செயல்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறி உள்ளோம்” என்று கூறினார். 

முன்னதாக மாணிக்கராஜா இன்று காலை திமுகவில் இணைவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு அமமுக-வின் கட்டுப்பாட்டை மீறிய காரணத்துக்காக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்குவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory