» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தைப்பூசத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் : இந்து முன்னணி கோரிக்கை!

வெள்ளி 23, ஜனவரி 2026 3:19:39 PM (IST)



திருச்செந்தூரில் தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் பிப்.1ம் தேதி தைபூச விழா விமர்சையாக நடைபெற இருக்கிறது. ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மாலை அணிவித்து பாதயாத்திரை ஆக வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

குறிப்பாக நெல்லை மார்க்கத்தில் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது. அவ்வாறு வருகையில் கருங்குளம் பகுதியில் இருந்து ஆழ்வார் திருநகரி பகுதி வரை வரும் சாலை மிகவும் குறுகிய நிலையில் இருப்பதால் பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கும் வாகனங்களில் செல்பவர்களுக்கும் சற்று சிரமமாக உள்ளது. 

ஆகையால் நெல்லையிலிருந்து வரும் வாகனங்களை கருங்குளத்தில் இருந்து இடதுபுறமாக உள்ள புதிய சாலை மார்க்கமாக திருப்பி அனுப்பிடவும் கருங்குளம் முதல் ஆழ்வார் திருநகரி வரை உள்ள வழித்தடத்தை வரும் 28/01/2026 முதல் 01/02/2026 வரை ஒரு வழி பாதையாக மாற்றிடவும் (பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் ரதத்தை தவிர மற்ற வாகன போக்குவரத்தை மாற்றி அமைத்திட) மாவட்ட நிர்வாகத்தை இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சில இடங்களில் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பாதைகள் பராமரிப்பு இன்றி மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் பக்தர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் மீண்டும் சாலையில் நடக்கும் நிலையை ஏற்பட்டுள்ளதால் அதனையும் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன், நெல்லை கோட்ட செயலாளர் க.பிரம்மநாயகம், தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் சரவணகுமார், ஒன்றிய தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory