» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஐஏஎஸ் பயிற்சி மையம் அடிக்கல் நாட்டுவிழா!

வெள்ளி 23, ஜனவரி 2026 10:38:14 AM (IST)


தூத்துக்குடி மேல அலங்காரத்தட்டு கிராமத்தில்  ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம் மேல அலங்காரத்தட்டு கிராமத்தில், சந்திரகாந்தன் நினைவு முற்றத்தில், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளரும், தேவேந்திரகுல வேளாளர் சமூக இளைஞர்களை கல்வி வேலை வாய்ப்புகளில் முன்னேற்றம் காண சென்னை திரிசூலத்தில் கல்வி மேம்பாட்டு இயக்கம் அமைத்து, மருதம் அறக்கட்டளை மூலம் போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளித்து பல்வேறு இளைஞர்களை அரசுப் பணிகளில் அமரக்காரணமாக இருந்தவரும் வழக்கறிஞருமாகிய சந்திரகாந்தனுடைய முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு மள்ளர் பேராயத்தின் தலைவர் சுபாசினி மள்ளத்தி தலைமை தாங்கினார். தமிழர்களம் தலைவர் அரிமா வளவன் நினைவுச் சுடரேற்றி உரையாற்றினார். வழக்கறிஞர் சிவசாமி தமிழன் எழுதிய நானே சாட்சி என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. சந்திரகாந்தன் நினைவு முற்றத்தில் களம் போட்டித் தேர்வு ஐஏஎஸ் பயிற்சி மையம், மற்றும் நூலகத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. தூத்துக்குடி சமூகச் செயற்பட்டாளர் மோகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். 

நிகழ்ச்சியில் குயிலி நாச்சியார், எரிமலை இராமச்சந்திரன், சமர்ப்பா குமரன், ராஜ்குமார், இரணியன், தமிழ் முகிலன், இராசா கிருஷ்ணன், வழக்கறிஞர்கள் சிவசாமி தமிழன், பகத்சிங், தயாளன, அருமைராஜ், பற்குணன் சதாசிவம், பாவலர் ராமச்சந்திரன், எழிலரசு, பேராசிரியர் சம்பத்குமார், ரமேஷ் தேவேந்திரன், ரவி தேவேந்திரன், பீமா பாண்டியன், தமிழ் கார்த்திக், மணிகண்டன், ராஜ்குமார், சந்திரமோகன், கர்ணன், செந்தில் மள்ளர், வையவன், ராஜ் பாண்டியன், தமிழ்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory