» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்​துக்​குடி​ உப்பளங்களில் சீரமைப்பு பணிகள் தீவிரம்: 25 லட்சம் டன்​ உப்பு உற்பத்திக்கு இலக்கு

வெள்ளி 23, ஜனவரி 2026 3:56:03 PM (IST)

தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் நடப்பாண்டில் 25 லட்​சம் டன் உப்பு உற்​பத்தி என்ற இலக்கை குறி​வைத்து 25 ஆயிரம் ஏக்​கர் உப்​பளங்​களை தயார்​படுத்​தும் பணி​கள் தொடங்கி உள்​ளன.

நாட்​டின் உப்பு உற்​பத்​தி​யில் குஜ​ராத்​துக்கு அடுத்​தப்​படி​யாக தூத்​துக்​குடி மாவட்​டம் 2-ம் இடத்​தில் உள்​ளது. அம்​மாவட்​டத்​தில் வேம்​பார், தூத்​துக்​குடி, முத்​தை​யாபுரம், முள்​ளக்​காடு, ஆறு​முகநேரி பகு​தி​களில் 25 ஆயிரம் ஏக்​கரில் உப்​பளங்​கள் உள்​ளன. இவற்​றில் சுமார் 50 ஆயிரம் தொழிலா​ளர்​கள் வேலை செய்​கின்​றனர்.

ஜனவரி மாதம் உப்பு உற்​பத்​திக்​கான பணி​கள் தொடங்​கும். ஏப்ரல் முதல் செப்​டம்​பர் வரையி​லான 6 மாதங்​கள்​தான் உப்பு உற்​பத்​திக்கு உகந்த காலம். அக்​டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்​கியதும் உப்பு சீஸன் முடிவடை​யும். ஆண்டுக்கு சராசரி​யாக 25 லட்​சம் டன் உப்பு உற்​பத்தி செய்யப்படு​வது வழக்​கம். ஆனால், கடந்த ஆண்டு சுமார் 19 லட்சம் டன் உப்பு மட்​டுமே உற்​பத்​தி​யானது.

குறை​வாக உற்​பத்தி செய்​யப்​பட்​டாலும் தமிழகத்​தில் உப்பு விலை உயர​வில்​லை. இந்​நிலை​யில், கடந்த 19-ம் தேதி தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை வில​கியது. இதைத் தொடர்ந்​து, தூத்துக்குடி மாவட்​டத்​தில் உள்ள 25 ஆயிரம் ஏக்​கர் உப்பளங்களையும் சீரமைக்​கும் பணி​கள் தீவிரமடைந்​துள்​ளன. கடந்த ஒரு மாத​மாகவே மழை பெய்​ய​வில்​லை.

இதனால், உப்​பளங்​களில் தேங்​கி​யிருந்த ஜிப்​சத்தை அகற்​றும் பணியை தொழிலா​ளர்​கள் மேற்​கொண்​டனர். தற்​போது, உப்​பளங்​களில் குவிந்​துள்ள மணல் குவியல்​களை அகற்​று​தல், கரைகளை சீரமைத்​தல், ஆழ்​துளைக் கிணறுகளை சரி செய்​தல், பாத்​தி​களில் உப்​புநீர் நிரப்​புதல் போன்ற பணி​களை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

இப்​பணி​கள் முடிவடைந்து உப்பு உற்​பத்தி தொடங்​கு​வதற்கு மார்ச் மாத​மாகி​விடும். எனவே, நடப்​பாண்டு மார்ச் முதல் வாரத்​திலேயே உப்பு உற்​பத்தி முழு அளவில் தொடங்​கும் என எதிர்​பார்க்​கப் ​படு​கிறது. கடந்த ஆண்டு உப்பு உற்​பத்தி குறைந்த நிலை​யில், இந்த ஆண்டு எப்​படி இருக்​கும் என்​பது வரும் மாதங்​களில் நில​வும் வானிலை​யைப் பொறுத்தே அமை​யும்​ என உற்​பத்​தி​யாளர்​கள்​ தெரி​வித்​தனர்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory