» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் பேரணி: வாரத்தில் 5 நாட்கள் வேலையை அமல்படுத்த கோரிக்கை
வெள்ளி 23, ஜனவரி 2026 8:24:55 AM (IST)

தூத்துக்குடியில் வாரத்தில் 5 நாட்கள் வேலை முறையை அமல்படுத்த கோரி வங்கி ஊழியர்கள் பேரணி நடத்தினர்.
வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் வாரத்தில் 5 நாட்கள் வேலை என்பதை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் வங்கி ஊழியர்களின் கோரிக்கை பேரணி நேற்று மாலையில் நடந்தது. தூத்துக்குடி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணி தெற்கு பீச் ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு முடிவடைந்தது.
இந்த பேரணிக்கு பாரதஸ்டேட் வங்கி ஊழியர் சங்க உதவி பொதுச் செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் மெல்பர் சேவியோ, அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராமசுப்பிரமணியன், கனராவங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் ஜெயராம், தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் ராஜாஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் பங்கேற்ற ஊழியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பதாகை ஏந்தி சென்றனர். பேரணியில் வங்கி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி உப்பளங்களில் சீரமைப்பு பணிகள் தீவிரம்: 25 லட்சம் டன் உப்பு உற்பத்திக்கு இலக்கு
வெள்ளி 23, ஜனவரி 2026 3:56:03 PM (IST)

தைப்பூசத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் : இந்து முன்னணி கோரிக்கை!
வெள்ளி 23, ஜனவரி 2026 3:19:39 PM (IST)

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீத்தடுப்பு செயல்முறை விளக்கப் பயிற்சி!
வெள்ளி 23, ஜனவரி 2026 3:13:56 PM (IST)

தன்பாடு உப்பு தொழிலாளர்கள் சங்க கட்டிடம் திறப்பு விழா : மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
வெள்ளி 23, ஜனவரி 2026 3:03:15 PM (IST)

தூத்துக்குடியில் 16வது தேசிய வாக்காளர் தினம் : ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 23, ஜனவரி 2026 12:11:06 PM (IST)

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அமமுக முன்னாள் துணை பொதுச்செயலாளார்!
வெள்ளி 23, ஜனவரி 2026 11:07:06 AM (IST)








