» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்: தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு

செவ்வாய் 20, ஜனவரி 2026 8:54:04 PM (IST)



வீரபாண்டியன்பட்டணம் கடலில், தூண்டில் வளைவு முறையாக அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவால் ஏற்பட்ட மணல் திட்டுகளை அகற்றவும், தூண்டில் வளைவை மாற்றி அமைக்க வலியுறுத்தியும் கடந்த 21 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைபர் படகில் கருப்பு கொடி கட்டி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக கடற்கரை பகுதியில் மீன் இறக்கும் கூடாரத்தில் மீனவர்கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஊர் நலக்கமிட்டி தலைவர் பெயிட்டன், துறைமுக கமிட்டி தலைவர் ஜெபமாலை தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்குதந்தை அலாய்சியஸ், பெரியதாழை, மணப்பாடு. குலசை, கல்லாமொழி, ஆலந்தலை, அமலிநகர், திருச்செந்தூர் ஜீவாநகர், சிங்கித்துறை, கொம்புத்துறை, புன்னக்காயல், பழையகாயல், தூத்துக்குடி உள்ளிட்ட 18 மீனவ கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். மேலும் போராட்டத்துக்கு தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரைட்டர் தலைமையில் போராட்ட குழுவினருக்கு ஆதரவளித்து பங்கேற்றனர். 

இதில் மாவட்ட இணைச் செயலாளர் விஜய் ஆனந்த், மாவட்ட துணைச் செயலாளர் முத்து கனி முருகேசன், மாவட்ட பொருளாளர் சிவகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜோதி குமார், ராஜபோஸ் முகைதீன், அமிர்தா, சஜினா, ரோகிணி, மற்றும் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பத்ரி பிரசாத், ஆழ்வை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆசிர் ராஜ்குமார்,உடன்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயராஜ், காயல்பட்டணம் நகரச் செயலாளர் ஹனிபா, திருச்செந்தூர் நகரச் செயலாளர் முருகானந்தம், ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் நிவாஸ், நாசரேத் பேரூர் கழக செயலாளர் சுதர்சன், உட்பட 200 க்கு மேற்பட்ட மாவட்ட, நகர ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் மாவட்டச் செயலாளர் பிரைட்டர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கடற்கரை பகுதியில் மண் அரிப்பு ஏற்படும் பகுதியினை ஆய்வு மேற்கொண்டனர்.


மக்கள் கருத்து

AsoniyaJan 20, 2026 - 10:53:54 PM | Posted IP 172.7*****

வணக்கம் ஐயா 🙏🙏 வீரபாண்டியன் பட்டணம் நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலமையை பார்த்தால் ரொம்பவே கஷ்டமா இருக்கு.... இவ்ளோ பெரிய பிரச்சினையை சந்திப்போம் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்க வில்லை. எங்கள் வீட்டு கஷ்டங்களை யார் கிட்ட சொல்லுவோம்? யார் எங்களுக்கு உதவி பண்ணுவங்கனு கூட தெரியாம இருக்கோம். எங்க கண்ணீரை கூட அடக்கி தான் இந்த போராட்டத்தில் கண்டிப்பா முடிவு வரும்னு எல்லா கஷ்டங்களையும் தாங்கி நிற்கிறோம். நான் எனக்கா மட்டும் எதையும் நினைக்கல எங்கள் மக்கள் எல்லாதுக்காகவும் தான் பேசுறேன்...யார் எந்தாள போனால் என்ன என்று நினைத்தால் என் கணவனை வேற ஊர்க்கு கடல்தொழில்கு அனுப்பி சம்பாதிக்க முடியும் தயவு செய்து எங்களுக்கு உதவி செய்யணும் என்று நினைத்தால் எங்கள் மக்கள் சார்பாக நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதை இன்னும் வெளியில் தெரிய படுத்துங்கள். நானும் உங்களைப் ஒருத்தி. நன்றி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory