» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாட்கோ மூலம் கேட்டரிங் டெக்னாலஜி பயிற்சி : மாணாக்கர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 3:29:37 PM (IST)
12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டியில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்து படித்திட விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக பனிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு தேசிய தேர்வு முகமை (NTA) சார்பில் தேசிய ஹோட்டல் மேலாண்மை கவுன்சில் இணை நுழைவுத்தேர்வு (NCHM JEE-2026) மூலமாக B.Sc (Hospitality & Hotel Administration) ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டியில் மூன்று வருட முழுநேர பட்டப்படிப்பில் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.சென்னை தரமணியிலுள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition என்ற நிறுவனமானது ISO 9001 2015 தரச்சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமையப்பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம், மேலும் இந்நிறுவனம் சர்வதேசAmercian Council of Business அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் பிரான்ஸ் நாட்டில் உள்ள Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. Hotel Management Institute Survey 2022- ன்படி உலகளாவிய மனிதவள மேம்பாட்டு மையத்தில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளது.CEO WORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலகதர வரிசையில் பதிமூன்றாவது இடத்தில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது.
மேற்கண்ட நிறுவனத்தில் பயில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராகவும், பனிரெண்டாம்வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றுயிருக்கவேண்டும். குடும்பவருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்கவேண்டும், தேசிய தேர்வு முகமை (NTA) சார்பில் தேசிய ஹோட்டல் மேலாண்மை கவுன்சில் இணை நுழைவுத்தேர்வு (NCHM JEE-2026)-க்கு விண்ணப்பிக்க கடைசிதேதி 25.03.2026
இத்தேர்வானது 25.04.2026 அன்று இணையதளம் வழியாக நடைபெறும் இத்தேர்வினை பற்றிய மேலும் விவரங்கள் மற்றும் பதிவு செய்யhttp://exams.nta.nic.in/nchm-jee/ என்ற இணையதளத்தினை தொடர்பு கொள்ளலாம். இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். மேலும் இப்படிப்பினை தாட்கோ மூலமாக பயில www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
இப்படிப்புகளை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் தங்களது திறமையின் அடிப்படையில் நட்சத்திர விடுதிகள், உயர்தர உணவகங்கள் விமானத்துறை, கப்பல்துறை மற்றும் சேவை துறைசார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வழிவகை செய்யப்படும். ஆரம்பகாலமாத ஊதியமாக ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம் என தூத்துக்குடி மாவட்டஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)

தூத்துக்குடியில் சாரண, சாரணியர் சிந்தனை நாள் விழா: 15 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:06:07 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தேர்வில் வெற்றி பெற கல்லூரி மாணவர்கள் சிறப்புப் பிரார்த்தனை!
வெள்ளி 6, மார்ச் 2026 4:43:53 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)









