» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மணப்பாடு அருகே 73 கிலோ எடையுள்ள ராட்சத சுறா சிக்கியது: ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்!

வெள்ளி 6, மார்ச் 2026 8:22:01 AM (IST)

மணப்பாடு அருகே கடலில் மீனவர் வீசிய வலையில் 73 கிலோ எடையுள்ள ராட்சத சுறா மீ்ன சிக்கியது.

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மீனவ கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மணப்பாட்டைச் சேர்ந்த ஜெயக்கர் என்பவர், நேற்று அதிகாலை சக மீனவர்களுடன் நாட்டுப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார்.

கரையிலிருந்து சுமார் 23 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஜெயக்கர் வீசிய வலையில் ராட்சத மீன் ஒன்று சிக்கியது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீனவர்கள் அந்த மீனைப் படகில் ஏற்றினர். அப்போது அது ஒரு ராட்சத சுறா மீன் என்பது தெரியவந்தது.

கரைக்கு கொண்டு வரப்பட்ட அந்தச் சுறா மீனை எடை போட்டபோது அது 73 கிலோ எடை இருந்தது. இந்த ராட்சத சுறாவை அந்தப் பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்துச் சென்றனர். பின்னர் நடைபெற்ற ஏலத்தில், வியாபாரி ஒருவர் இந்தச் சுறா மீனை 16 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். ஏலம் எடுக்கப்பட்ட மீன் பின்னர் வேன் மூலம் ஏற்றிச் செல்லப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory