» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
துணை முதல்வர் உதயநிதி நாளை தூத்துக்குடி வருகை: ரூ.300 கோடி மதிப்பில் திட்டங்கள் தொடக்கம்!
வெள்ளி 6, மார்ச் 2026 11:17:52 AM (IST)

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நாளை (மார்ச் 7, சனிக்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்டத் தொடக்க விழாக்களில் பங்கேற்க உள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை காலை தூத்துக்குடி வருகை தருகிறார்.
காலை 9.30 மணி அளவில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அதிநவீன உயர்தர சிறப்பு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவைத் திறந்து வைத்து, அங்குள்ள வசதிகளைப் பார்வையிடுகிறார்.
அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட அரசு விழாவில் கலந்து கொள்கிறார். அங்கு சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். புதிய திட்டப் பணிகளுக்குக் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயன்கள், வீட்டுமனைப் பட்டாக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்குக் கடனுதவி உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்குகிறார்.
தொடர்ந்து, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.64.17 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 528 அடுக்குமாடி குடியிருப்புகளை அவர் திறந்து வைக்கிறார்.
முற்பகல் 11.30 மணி அளவில், புதுக்கோட்டை சத்யா ரிசார்ட்டில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கிறார். அங்கு மாவட்டத்திற்குட்பட்ட திமுகவின் பல்வேறு சார்பு அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு, பிற்பகல் 1.30 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)

தூத்துக்குடியில் சாரண, சாரணியர் சிந்தனை நாள் விழா: 15 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:06:07 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தேர்வில் வெற்றி பெற கல்லூரி மாணவர்கள் சிறப்புப் பிரார்த்தனை!
வெள்ளி 6, மார்ச் 2026 4:43:53 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)









