» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்ரீவைகுண்டம் கோவிலில் ரூ.1.28 கோடியில் புதிய தேர் : பூமிபூஜையுடன் பணிகள் தொடக்கம்

வெள்ளி 6, மார்ச் 2026 8:32:59 AM (IST)



ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் புதிய தேர் செய்யும் பணிக்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள நவகைலாயத் தலங்களில் 6-வது தலமான (சனி தலம்) கைலாசநாதர் கோவிலின் பழமையான தேர் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த பல ஆண்டுகளாகக் கோவில் சித்திரை திருவிழாவின் போது தேரோட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்தத் தேரைச் சீரமைத்துத் தர வேண்டும் என ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மற்றும் பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று, இக்கோவிலுக்குப் புதிய தேர் செய்வதற்குப் பந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.1.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 40 சதவீத நிதி தனியார் பங்களிப்புடன் திரட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நேற்று கோவில் வளாகத்தில் புதிய தேர் செய்வதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இப்புதிய தேர் மிகுந்த கலைநயத்துடன் செய்யப்பட உள்ளது.

இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில்: "தேர் செய்யும் பணியை விரைவாகவும், தரமாகவும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சித்திரை திருவிழாவின் போது, புதிய தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெறும்." எனத் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory