» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நாய் கடித்து 14 பணியாளர்கள் காயம்!

வெள்ளி 6, மார்ச் 2026 3:22:22 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தெரு நாய்கள் கடித்து 14 பணியாளர்கள் காயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் கடந்த இரண்டு தினங்களாகத் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அனல்மின் நிலைய உட்புற வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்கள், அங்கு பணியில் இருந்த ஊழியர்களைத் திடீரெனத் தாக்கியுள்ளன.

நேற்றும், இன்றுமாகச் சேர்த்து மொத்தம் 14 பணியாளர்களை நாய்கள் கடித்ததில் அவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்குத் தேவையான தடுப்பூசிகளும் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளன.

வளாகத்திற்குள் நாய்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பணியாளர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனல்மின் நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory