» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வனங்களை உருவாக்க கல்லூரி மாணவர்கள் உறுதியேற்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 5:12:35 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் விதைப்பந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் விதைப்பந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் அருண் குமார் மற்றும் கல்லூரி முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் கலந்து கொண்டு விதை பந்துகளால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பேசினார். கல்லூரி மாணவ மாணவியருக்கு விதை பந்துகள் பற்றியும், அதன் மகத்துவம், எவ்வாறு தயாரிப்பது, விதை பந்துகள் செய்ய தேவையான மர விதைகளை எப்படி சேகரிப்பது, ஏன் இந்தியாவின் தென் முனைக்கு மழை தேவை என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
கல்லூரி மாணவர்கள் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தி வீணாக்கக் கூடிய எலுமிச்சை, சப்போட்டா, சீதா, புளி, வேம்பு, பேரிச்சை ஆகிய விதைகளை சேகரித்து 1,00,000 விதைப்பந்துகளாக உருவாக்க வேண்டுமென்று எஸ்.எஸ். டி.எம் கல்லூரி மாணவர்கள் உறுதி ஏற்றனர். முன்னதாக, கல்லூரி வளாகத்தில் மாணவியர்கள் கோகிலா, குமுத மலர், மற்றும் மரிய சந்தியா ஆகியோர் அரச மரக்கன்று நட்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக கல்லூரி மாணவி திவ்யஜோதி நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நல பணி திட்ட அலுவலர் ஜெய் சிங், கல்லூரி பேராசிரியர்கள் செல்வ லட்சுமி, கனகபிரபா, ரமேஷ், ஆனந்த் குமார் மற்றும் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் தலைவர் ஹரிகரசுதன் ஆகியோர் செய்திருந்தனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி கணக்கு : உத்திரப்பிரதேச வாலிபர் கைது
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:36:56 PM (IST)

கலைத்திருவிழாவில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:42:58 PM (IST)

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:18:25 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் ரூ. 784 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:12:09 PM (IST)

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் மீது தாக்குதல் : காவல் நிலையம் முற்றுகை!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:02:32 PM (IST)

வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:55:28 PM (IST)